தண்டவாளத்தில் விழுந்த பாஜக பெண் எம்எல்ஏ.. வந்தே பாரத் ரயில் துவக்க நிகழ்ச்சியில் நூலிழையில் எஸ்கேப்
அகமதாபாத்: குஜராத்தில் நேற்று வந்தே பாரத் ரயில் சேவையை மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயிலை வரவேற்க காத்திருந்த பாஜக எம்எல்ஏ சரிதா கூட்ட நெரிசலால் தண்டவாளத்தில் தவறி விழுந்துவிட்டார். சரியாக ரயில் வரும் போது கீழே விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இதில் எந்த காயமும் இன்றி அந்த பெண் எம்எல்ஏ தப்பினார்.
வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து வரவேற்கும் நிகழ்ச்சியின் போது, கூட்ட நெரிசலால் ரயில் தண்டவாளத்தில் பாஜக பெண் எம்எல்ஏ தவறி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. நல்வாய்ப்பாக இதில் எந்த காயமும் இன்றி அந்த பெண் எம்எல்ஏ தப்பினார். சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோ குறித்த விவரங்கள் வருமாறு:-

உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில் இருந்து வாரணாசிக்கு புதிதாக வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ராஞ்சியில் இருந்து காணொலி வாயிலாக பிரதமர் மோடி இந்த வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்க்கி வைத்தார். பிரதமர் மோடி ரயில் சேவையை தொடங்கி வைத்த பிறகு இந்த ரயில் செல்லும் வழித்தடங்களில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் வந்தே பாரத் ரயிலுக்கு உள்ளூர் எம்எல்ஏ, மற்றும் எம்பிக்கள் உள்ளிட்டோர் வரவேற்பு கொடுத்தனர்.
பூக்கள் தூவி வந்தே பாரத் ரயிலை வரவேற்றனர். அந்த வகையில் தான், துண்ட்லா ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் வந்து கொண்டு இருந்தது. இந்த ரயிலை வரவேற்க ஏராளமானோர் ரயில்வே பிளாட்பார்மில் திரண்டு இருந்தனர். சமாஜ்வாடி கட்சி எம்பி ஜிதேந்திர துவாரே, பாஜக முன்னாள் எம்பி ராம் சங்கர், தற்போத எம்.எல்.ஏ சரிதா பஹதுரியா ஆகியோர் வந்தே பாரத் ரயிலை வரவேற்க தயாராக நின்று கொண்டிருந்தனர்.
ரயில், ரயில் நிலையத்திற்கும் வந்ததும் அங்கிருந்தவர்கள் முண்டியடித்தனர். அப்போது பிளாட்பார்மில் ரயிலை வரவேற்க தயாராக நின்ற பாஜக பெண் எம்எல்ஏ சரிதா பஹதுரியா நிலை தடுமாறி ரயில்வே தண்டவாளத்தில் விழுந்தார். வந்தே பாரத் ரயிலும் ஸ்டேஷனில் நிற்பதற்காக மெதுவாக வந்ததால் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

கீழே விழுந்த எம்எல்ஏவை அங்கிருந்தவர்கள் உடனடியாக தூக்கிவிட்டனர். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் பற்றி எடவா நகர பாஜக நிர்வாகி சஞ்சீவ் பஹதூரிய கூறுகையில், "எம்எல்ஏ அங்கிருந்தவர்களுடன் உதவியுடன் உடனடியாக தண்டவாளத்தில் இருந்து மேலே ஏறி பிளாட்பார்முக்கு வந்துவிட்டார்.
ரயில் புறப்பட்டு சென்ற பிறகு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். தற்போது வீட்டில் நலமுடன் ஓய்வு எடுத்து வருகிறார். வெளிப்புறத்தில் அவருக்கு காயம் எதுவும் இல்லை. ஏதேனும் உள்காயம் ஏற்பட்டதா? என்பது பற்றி தெரியவில்லை" என்றார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications