பாஜக பிரமுகர் கொலையால் மைசூரில் வெடித்தது வன்முறை.. போலீஸ் குவிப்பு
மைசூர்: பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மத மோதலாக உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் கர்நாடகாவில், குறிப்பாக, மைசூர் பகுதியில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
மைசூரை சேர்ந்தவர் கே.ராஜு. பாஜக நிர்வாகி. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மைசூரின் உதயகிரி பகுதியிலுள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

வேறு ஒரு மதப்பிரிவினர் மைசூரின் ஒரு பகுதியில் வழிபாட்டு தலம் கட்டிய நிலையில், அதை எதிர்த்ததற்காக ராஜு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மைசூர் பந்த்துக்கு பாஜக மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. நேற்று நடைபெற்ற பந்த்தின்போது, பஸ்கள், ஆட்டோக்கள் கல் வீச்சுக்கு உள்ளாகின. சில கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து மைசூரில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மைசூரில் இன்று பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது. தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் அதிரடி படையினர் வரவழைக்கப்பட்டு, கொடி அணி வகுப்பு நடத்தப்பட்டது. பஸ், ஆட்டோக்கள் வழக்கம்போல இயங்கின. பள்ளி, கல்லூரிகள் திறந்திருந்தன.
முக்கிய பகுதிகளில் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மைசூர் நகரம் கொஞ்சம், கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்'












Click it and Unblock the Notifications