குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி: கொண்டாடும் பாஜகவினர்!
குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றுள்ளார்.
டெல்லி: குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றுள்ளார். இதனை வெடி வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.
பாஜக வேட்பாளரான ராம்நாத் கோவிந்த் நாட்டின் 14 வது குடியரசு தலைவர் ஆகிறார். மொத்தமுள்ள 10 லட்சத்து 98,882 வாக்குகளில் 5.50 லட்சத்துக்கு மேல் வாக்குகளை பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து நாட்டின் 14வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 17 ஆம் தேதி நடைபெற்றது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் எதிர்க்கட்சி வேட்பாளர் மீராகுமாரைவிட இருமடங்கு வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
இதனை பாஜகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தலைநகர் டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களிலும் பாஜகவின் தலைமை அலுவலகங்களில் தொண்டர்கள் வெடி வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications