Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாக்குறுதிகளை வீசி வாக்குகளை அள்ளிய பாஜக.. முக்கியமான மேட்டர் இதான்.. எதிர்பார்க்கும் ம.பி மக்கள்!

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜகவின் வெற்றிக்கு, தேர்தல் வாக்குறுதிகளும், பாஜக அரசு கடைசி நேரத்தில் செயல்படுத்திய திட்டங்களும் பெரியளவில் கை கொடுத்துள்ளன. மீண்டும் பாஜக ஆட்சி அமையும் நிலையில், வாக்குறுதிகள் பற்றிய எதிர்பார்ப்பு மக்களியே எழுந்துள்ளது.

மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலில், மீண்டும் பாஜக வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அங்கு பாஜக 164 இடங்களிலும், காங்கிரஸ் 65 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், மற்ற கட்சிகளின் ஆதரவுடன் கமல்நாத் முதல்வராகி, அடுத்த 15 மாதங்களில் ஜோதிராத்ய சிந்தியா கட்சி தாவலால் காங் ஆட்சி கவிழ்ந்து, பாஜக ஆட்சி அமைந்தது. இந்த நிலையில் இந்த முறை க்ளீன் ஸ்வீப் அடித்துள்ளது பாஜக.

BJPs election promises helped to big victory in Madhya pradesh

பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களின் தீவிர பிரச்சாரங்கள், நீண்டகாலமாக ம.பி முதல்வராக இருந்து வரும் சிவ்ராஜ் சிங் மீதான நம்பிக்கை, பாஜக அளித்த வாக்குறுதிகள் உள்ளிட்டவை பாஜகவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியுள்ளன. முக்கியமாக லட்லி பெஹனா திட்டம், பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, பாஜகவுக்கு வாக்குகளை அள்ளிக் கொடுத்துள்ளது.

நம்ம ஊர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் போல, ம.பி தேர்தலுக்கு 8 மாதங்களுக்கு முன்னதாக, கடந்த மார்ச் மாதம் மத்தியப் பிரதேசத்தின் 1.3 கோடி பெண்களுக்கு ரொக்கப் பணம் அளிக்கும் லட்லி பெஹ்னா யோஜனா திட்டத்தை அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.1,000 நிதியுதவி வழங்கப்பட்டு வந்த நிலையில், ஆகஸ்டில் ரூ.1,250 ஆக உயர்த்தப்பட்டது.

முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பேசும்போது, எனது ஆட்சியில் முதன்மையான திட்டம் 'லட்லி பெஹ்னா யோஜனா'.இதன்மூலம் பெண் பயனாளிகள் ஒவ்வொரு மாதமும் பணம் பெற்று வருகிறார்கள். இந்த தொகை படிப்படியாக ரூ.3,000 வரை உயர்த்தப்படும். மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அந்தத் தொகை நிறுத்தப்படும்" என்றார். இது மக்கள் மத்தியில் நன்கு வேலை செய்துள்ளது.

இந்நிலையில், மீண்டும் பாஜக வென்றுள்ள சூழலில் பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் பற்றிய பேச்சு, சாமானிய மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. விரைவில் அமையவிருக்கும் புதிய பாஜக அரசு, இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பா.ஜ.கவின் சில முக்கிய தேர்தல் வாக்குறுதிகள்:

1. கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு 2,700 ரூபாயாக உயர்த்தப்படும். நெல்லுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு 3,100 ரூபாயாக உயர்த்தப்படும்.
2. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஏழைகளுக்கு உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும்.
கிஸான் சம்மான் நிதி, கிஸான் கல்யாண் யோஜனா திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 12,000 ரூபாய் வழங்கப்படும்.
3. முக்ய மந்த்ரி ஜன் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தரப்படும்.
4. லட்லி பெஹ்னா திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு வீடுகள் கட்டித்தரப்படும். நிதி உதவி செய்யப்படும், சிலிண்டர் 450 ரூபாய்க்குத் தரப்படும்.
5. கிராமங்களைச் சேர்ந்த 15 லட்சம் பெண்களுக்கு சுய வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி தரப்படும்.
6. 12-ஆம் வகுப்பு வரை எல்லோருக்கும் இலவசக் கல்வி தரப்படும்.
7. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் ஒரு மருத்துவக் கல்லூரி உருவாக்கப்படும்.
8. அரசுப் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்துடன், காலை உணவு வழங்கப்படும்.
9. 6 எக்ஸ்பிரஸ்வே சாலைகள் அமைக்கப்படும்.
10. பழங்குடியின சமுதாயம் அதிகாரம் பெற பட்ஜெட்டில் ரூ. 3 லட்சம் கோடி ஒதுக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+