“ஆபரேசனை” ஆரம்பித்த பாஜக.. தேர்தலுக்கு ஒரு மாதம் முன் மிசோரத்தில் சபாநாயகரையே தட்டித்தூக்கிய தாமரை
அய்சால்: மிசோரத்தில் நவம்பர் 7 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அம்மாநில சபாநாயகரையே தங்கள் கட்சிக்கு வளைத்துப் போட்டு இருக்கிறது பாஜக. இன்று அவர் கட்சியில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதன்படி வட கிழக்கு மாநிலமான மிசோரத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் நவம்பர் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்தில் 39 தொகுதிகள் பழங்குடியினருக்கானவை. இங்கு முதலமைச்சர் சொராம்தாங்கா தலைமையிலான எம்.என்.எஃப் எனப்படும் மிசோ தேசிய முன்னணி கட்சி அங்கு ஆட்சி செய்து வருகிறது.

மிசோரம் மாநிலத்தில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆளும் எம்.என்.எப் கட்சி 27 இடங்களில் வெற்றிபெற்றது. அடுத்ததாக ZPM (ஜொராம் மக்கள் முன்னணி கட்சி) 6 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் 5 தொகுதிகளிலும், பாஜக ஒரே ஒரு இடத்திலும் வெற்றிபெற்றது. மிசோரம் மாநில அரசின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் மீண்டும் அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
மிசோரத்தில் இதற்கு முன் ஆட்சியில் இருந்த கட்சி காங்கிரஸ். பு லல்தன்ஹவ்லா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அங்கு 10 ஆண்டுகள் நடைபெற்றது. அதை தொடர்ந்து 2018 தேர்தலில் அக்கட்சியை 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற வைத்த மிசோரம் மக்கள் ஆட்சியை எம்.என்.எப் கட்சிக்கு வழங்கினர். அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எம்.என்.எப், காங்கிரஸ், ZPM ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.
மிசோரத்தில் ஆளும் எம்.என்.எப் கட்சிக்கு அடுத்த இடத்தில் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் காங்கிரஸ் மக்கள் செல்வாக்கு மிகுந்த பெரிய கட்சியாக இருந்து வருகிறது. காங்கிரஸை விட ZPM கட்சி ஒரு தொகுதியில் அதிகம் வெற்றிபெற்று இருந்தாலும் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் காங்கிரஸை விட குறைந்த ஆதரவே அக்கட்சிக்கு உள்ளது. ஆனால், அங்கு ஒரே ஒரு தொகுதியை கைவசம் வைத்து இருக்கும் பாஜக இந்த தேர்தலிலும் ஒற்றை இலக்க தொகுதிகளிலேயே வெல்லும் என கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான் அருணாச்சல பிரதேசம் தொடங்கி மகாராஷ்டிரா வரை பாஜக கடந்த 10 ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் ஆபரேசன் தாமரையை மிசோரத்திலும் செய்ய முடிவு செய்து உள்ளது. இந்த ஆபரேசனுக்கு அக்கட்சி முதல் தேர்வு செய்த நபரே அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகரும் என்.என்.எப் கட்சியின் மூத்த நிர்வாகியுமான லால்ரின்லியானா சைலோதான். இவர் நேற்று தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
அடுத்த தேர்தலில் இவருக்கு அவரது கட்சித் தலைமை சீட் கொடுக்காததால் அதிருப்தியில் இருந்த இவர் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று துணை சபாநாகர் லால்பியாக்சாவாவிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கிய சைலோ, விலகல் தொடர்பாக எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை.
-
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications