வெளிநாட்டில் அக்கவுண்ட் வைத்திருப்போர் பெயரையெல்லாம் வெளியிட முடியாது: மத்திய அரசு
டெல்லி: கருப்பு பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் வைத்திருக்கும் இந்தியர்கள் பெயர்களை வெளியிடுவதில் தயக்கம் இல்லை என்றபோதிலும், ஆதாரமில்லாமல் அனைவர் பெயர்களையும் வெளியிட முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கருப்பு பணம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கில் இன்று மத்திய அரசு சார்பில், பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
சீல் வைக்கப்பட்ட அந்த பிரமாணப்பத்திரத்தில் டாபர் குரூப்பின் பிரதீப் பர்மன், கோவா சுரங்க தொழிலதிபர் ராதா எஸ். திம்ப்லோ மற்றும் தங்கம், வெள்ளி வியாபாரி பங்கஜ் சிமன்லால் லோத்யா ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்த பிறகு உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு கூறியதாவது: வெளிநாடுகளிலுள்ள வங்கிகளில் கருப்பு பணம் வைத்துள்ள இந்தியர்களின் பெயர்களை வெளியிடாமல் மறைத்து வைக்க மத்திய அரசுக்கு எந்த நோக்கமும் கிடையாது.
JUST IN: #BlackMoney #SC pic.twitter.com/jZmJGqAZAD
— Doordarshan News (@DDNewsLive) October 27, 2014 வரி ஏய்ப்பு செய்து வெளிநாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ள பணம் குறித்த தகவல் அனைத்தும், வெளியிடப்படும். வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் எல்லோரும் கருப்பு பணம் வைத்திருப்போர் என்று அர்த்தம் கிடையாது.
வெளிநாட்டு வங்கிகளில் உள்ள பணம் முறையாக சம்பாதிக்கப்பட்டதா, அல்லது, வரி ஏய்ப்பு செய்யப்பட்ட பணமா என்பது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து, அடிப்படை ஆதாரம் இருந்தால் மட்டும் அவர்கள் பெயரை வெளியிடும். இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications