மோடி கூட்டத்தில் குண்டு வைக்க 3 குழுக்களை அனுப்பிய குண்டுவெடிப்பு சதிகாரர்கள்
டெல்லி: நரேந்திர மோடி பங்கேற்ற கூட்டத்தில் வெடிகுண்டுகளை வைப்பதற்காக 3 குழுக்களாகப் பிரிந்து சென்றுள்ளனர் சதிகாரர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
பாட்னாவில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக பாட்னா காவல்துறையினர் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் 6 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

அதில் கூறப்பட்டுள்ளதாவது...
23 வயதான தெஷீன் அக்தர்தான் இந்த குண்டுவெடிப்புக்கு மூல காரணம். வெடிகுண்டுச் சம்பவங்கள் நடந்தபோது இவன் பாட்னாவில்தான் இருந்துள்ளான்.
இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் முக்கியப் புள்ளிகளில் இவனும் ஒருவன். பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சதி வேலைகளைக் கவனித்து வந்தான்.
மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்காக 3 குழுக்களை உருவாக்கி அனுப்பியுள்ளான் அக்தர். அதில் ஒரு பிரிவுதான் ரயில் நிலையத்தில் குண்டு வைத்தது. அங்குதான் முதல் குண்டு வெடித்தது.
மற்ற இரு பிரிவினர், காந்தி மைதானத்தில் குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர். இந்த மைதானத்தில்தான் பாஜக கூட்டம் நடந்தது.
காந்தி மைதானப் பூங்காவிலும் சுற்றுப் பகுதிகளுமாக மொத்தம் 6 வெடிகுண்டுகள் வெடித்துள்ளன.
வெடிக்காத நிலையில் நான்கு குண்டுகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களில் ஒருவனான அய்னுல் என்கிற தாரிக், குண்டு வைத்த கும்பலைச் சேர்ந்தவன். இன்னொரு நபர் இம்தியாஸ் என்கிற கலிமுதீன் அன்சாரி. இவனை பாட்னா ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்தனர் போலீஸார்.
இவர்கள் தவிர மற்ற நால்வரான அக்தர் உள்ளிட்டோர் இதுவரை கைது செய்யப்படவில்லை.
பீகாரிகன் சமஸ்திபூரைச் சேர்ந்தவன் அக்தர். இவனது தலைக்கு ஏற்கனவே போலீஸார் ரூ. 10 லட்சம் விலை வைத்துள்ளனர். வாரணாசி, 2011ல் மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு, ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு ஆகிய சம்பவங்களிலும் இவனுக்குத் தொடர்பு உள்ளது.
பல்வேறு வேடங்களில் இவன் சுற்றித் திரிவது வழக்கம். பெரும்பாலும் டூரிஸ்ட் கைடு போல பல பகுதிகளுக்கும் இவன் செல்வான். இதன் மூலம் சதிச் செயல்களை நடத்துவதற்கான வேவு பார்ப்பதில் வல்லவன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications