கள்ளக்காதல் மனைவி ப்ளூ டிரம்மில் பண்ண காரியம்.. வேவு பார்த்த கணவர்.. யாருமே எதிர்பார்க்காத வீடியோ
லக்னோ: கள்ளக்காதல் விவகாரத்தினால் ஏற்படும் விவாகரத்துகள், வன்முறைகள் நம்முடைய நாட்டில் அதிகரித்து வருகிறது. பச்சிளம் குழந்தைகளையே, பெற்ற தாய்கள் துடிதுடிக்க கொல்கிறார்கள் என்றால், தாலி கட்டிய கணவனையும் ஈவிரக்கமின்றி கொன்று விடுகிறார்கள். அந்தவகையில் கள்ளக்காதலுக்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பேதமின்றி உயிர்கள் காவு வாங்கப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், உத்தரபிரதேசத்தில் நடந்துள்ள சம்பவம் மொத்த பேரின் கவனத்தையும் பெற்று வருகிறது.
மீரட்டை சேர்ந்த அமெரிக்க கடற்படை நிறுவன அதிகாரி சவுரப் ராஜ்புத். இவரது மனைவி பெயர் முஸ்கன் ரஸ்தோகி.. சாஹில் சுக்லா என்பவருக்கும் முஸ்கனுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் தங்களது கள்ளக்காதலனுக்கு கணவன் இடையூறாக இருக்கவும், அவரை இந்த கள்ள ஜோடி கொன்றுவிட்டது.. பிறகு கணவனின் சடலத்தை 15 துண்டுகளாக வெட்டினார் முஸ்கன்.. அந்த உடலை நீல நிற காலி டிரம்மில் போட்டு, டிரம்மின் மீது கான்கீரிட் கலவையை மூடி சமாதியாக்கிவிட்டார்..
பிளாஸ்டிக் டிரம் - உறுப்புகள்
அதேபோல, சூரஜ் என்ற நபர், மனைவியின் கள்ளக்காதலை கண்டித்ததால், ராஜஸ்தானின் கிஷன்கர் பாஸில் ஒரு வீட்டின் கூரையில் நீல நிற பிளாஸ்டிக் டிரம்மிற்குள் இறந்து கிடந்தார். அவரது தொண்டை அறுக்கப்பட்டு, அவரது உடல் உறுப்புடன் மூடப்பட்டிருந்தது.
அவரது மனைவி சுனிதா மற்றும் வீட்டு உரிமையாளரின் மகன் ஜிதேந்திரா ஆகியோர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டனர். சுனிதாவின் 8 வயது குழந்தை இந்த கொடூரத்தை நேரில் பார்த்து உறைந்து கிடந்தது.. ஜிதேந்திராவின் உடலை டிரம்மில் தன்னுடைய அம்மா எப்படி திணித்தார் என்றெல்லாம் அந்த குழந்தை போலீசாரிடம் சொன்னது... இதையடுத்து கள்ளக்காதல் ஜோடி கைதானது.
ப்ளூ டிரம் சம்பவம்
இந்த ப்ளூ டிரம் கொலைகளானது, தேசத்தையே உறைய வைத்தது.. இப்படி கள்ளக்காதல்கள் காரணமாக, கணவன்மார்கள் கூலிப்படை வைத்தும், விஷம் வைக்கப்பட்டும் கொல்லப்பட்டு வரும் நிலையில், உத்தரபிரதேசத்தில் வியப்பு சம்பவம் ஒன்று கடந்த மாதம் நடந்தது.
சந்த் கபிர் நகரிலுள்ள கடார் ஜாட் என்ற கிராமத்தில் பப்ளு என்ற தொழிலாளி வசித்து வருகிறார்.. இவரது மனைவி பெயர் ராதிகா.. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பப்ளு வெளியூரில் வேலை பார்த்து வந்தபோது, ராதிகாவுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த இன்னொரு இளைஞருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
பப்ளூ எடுத்த முடிவு
இது பப்ளுவுக்கு தெரிந்துவிட்டது. உடனே ஊர்திரும்பிய பப்ளு, ராதிகாவை கண்டித்தார்..
ஆனால், தன்னால் கள்ளக்காதலன் இல்லாமல் வாழ முடியாது என்று ராதிகா சொல்லிவிட்டார்.
இதைக்கேட்டு அதிர்ந்த கணவர், சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தார்.. பிறகு ராதிகாவை அவருடைய கள்ளக்காதலனுக்கே திருமணம் செய்து வைப்பதாக, கிராம மக்களிடம் அறிவித்துவிட்டார். 2 குழந்தைகளையும் தானே வளர்ப்பதாக கூறி, உறவினர்களையும் கிராம மக்களையும் சமாதானம் செய்து, ஒப்புதலை பெற்றார் பப்ளு.
இறுதியில் அனைவரது முன்னிலையிலும் திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களை ஆசீர்வாதம் செய்தார்.. பிறகு குழந்தைகளை தன்னுடனேயே பப்ளு அழைத்துச் சென்றுவிட்டார்.
குலைநடுங்கிவிட்டது
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பப்ளு சொன்னபோது, "சமீப காலமாகவே, கணவர்கள் தங்கள் மனைவிகளால் கொலை செய்யப்படுகிறார்கள். அதுவும் மீரட்டில் நடந்த சம்பவத்தை பார்த்ததுமே எனக்கு குலைநடுங்கிவிட்டது.
அதனால்தான், நாங்கள் இருவருமே நிம்மதியாக வாழ என்ன வழி என்று யோசித்து, என் மனைவியை அவளுடைய கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டேன்" என்று கூறியிருந்தார்.

உளவு பார்த்த கணவர்
மனைவிக்கு கள்ளக்காதலனுடன் மறுமணம் செய்து வைக்கும் அளவுக்கு ப்ளூ டிரம் சம்பவம், வடமாநிலங்களில் நிலைகுலைய வைத்துவிட்டது..
இப்போது உத்தரபிரதேசம் வாரணாசியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. அங்கு வசித்து வரும் பெண்ணுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.. ஆனால், அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவருடன் கள்ள உறவு வைத்திருந்தார் அந்த பெண்.
இதனால், அப்பெண்ணுக்கும், கணவருக்கும் அடிக்கடி சண்டைகள் வெடித்தன.. ஒருநாள் தன்னுடைய மனைவியை மறைந்திருந்து உளவு பார்த்ததார். அப்போதுதான் தனது மனைவி வேறொருவருடன் உறவில் இருப்பது உறுதியானது..
52 வினாடிகள் வீடியோ
அந்த கள்ளக்காதல் ஜோடியை கையும் களவுமாக பிடித்த கணவர், ஊரையே கூட்டி அந்த கள்ளக்காதலனுக்கே மனைவியை திருமணம் செய்து வைத்துவிட்டார்..
மொத்தம் 52 வினாடிகள் கொண்ட இந்த திருமண வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.. தம்பதி இருவரும் ஒருவருக்கொருவர் மாலைகளை மாற்றி கொள்வதும் வீடியோவில் பதிவாகியிருக்கிறது.
இந்த வீடியோவை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.. ஒரு ஏழை மனிதன் ப்ளூ கலர் டிரம்மிலிருந்து தப்பித்தான்" என்றும், மிகச்சிறந்த கணவர் என்றும் பலரும் கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications