மகளை காணச் சென்ற போது விபத்து.. 2 நாட்களாக உடலில் ஏறிச் சென்ற வாகனங்கள்.. அதிர்ந்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

மத்தியபிரதேசம்: இப்படியொரு சாவு யாருக்கும் வரக்கூடாது என்பது போன்ற ஒரு மோசமான மரணம் முதியவர் ஒருவருக்கு அரங்கேறியுள்ளது.

மத்தய பிரதேசத்தின் ராவா மாவட்டத்தில், கடந்த வியாழனன்று, 75 வயதான முதியவர் சம்பத்லால், சுர்ஹட்டில் உள்ள தனது மகளை பார்க்க சென்றிருக்கிறார். ஆனால், கிளம்பிச் சென்றவர் அதன் பிறகு வீடு வந்து சேரவில்லை என்று குடும்பத்தார் புகார் அளித்திருக்கின்றனர்.

Body of 75-year-old repeatedly crushed by vehicles in mp scattered bones found

ஆனால், வெள்ளியன்று ராவா மாவட்டத்தின் நெடுஞ்சாலைப் பகுதியில் மனித உடல் ஒன்று சில்லு சில்லாய் நொறுங்கி கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, அவர்கள் உடனே அங்கு விரைந்தனர்.

கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக, அது மனித உடல் என்று தெரியாமல், வாகனங்கள் அதன் மீது தொடர்ச்சியாக ஏறிச் சென்றிருக்கின்றன. இதில், அந்த உடலின் அனைத்து எலும்புகளும் நொறுங்கிவிட்டன. சாலையெங்கும் பரவலாக எலும்புகள் சிதறிக் கிடந்துள்ளது.

பிறகு, உடையை வைத்து அந்த உடல் மகளை காணச் சென்ற சம்பத்லால் உடையது என்பதை போலீஸார் உறுதி செய்தனர். விசாரணையில், குறிப்பிட்ட அந்த விபத்து பகுதியில், விளக்குகள் ஏரியாததால், வாகனங்கள் உடலின் மீது ஏறிச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+