உலகின் முதல் சைவ பாடிபில்டர் Varinder! Bicepsல் சர்ஜரி! நடிகர் வரீந்தர் குமான் மரணம்! என்னாச்சு?
ஜலந்தர்: பாடிபில்டரும் நடிகருமான வரீந்தர் குமான் (42) மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் சல்மான் கான் நடித்த டைகர் 3 படத்தில் நடித்துள்ளார். இவர் மிஸ்டர் இந்தியா பட்டத்தை கடந்த 2009ஆம் ஆண்டு பெற்றிருந்தார். அதுபோல் மிஸ்டர் ஆசியா போட்டியில் 2ஆம் இடத்தை பெற்றுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸை சேர்ந்தவர் வரீந்தர் குமான். இவர் உலகின் முதல் சைவ பாடி பில்டர் என சொல்லப்படுகிறார். இவர் நிறைய படங்களிலும் இசை வீடியோக்களிலும் நடித்துள்ளார். சர்வதேச ஃபிட்னஸ் மற்றும் பாடிபில்டிங் கூட்டமைப்பின் அட்டையை வைத்திருக்கும் முதல் இந்தியர் ஆவார்.

இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு "கபாடி ஒன்ஸ் அகைன்" எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் கடந்த 2009ஆம் ஆண்டு மிஸ்டர் இந்தியா பட்டத்தை வென்றார். அது போல் மிஸ்டர் ஆசியா எனும் போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தார்.
வரீந்தர், கடந்த 2014 ஆம் ஆண்டு "ரோர்: டைகர்ஸ் ஆப் தி சுந்தர்பன்ஸ்", 2019ஆம் ஆண்டு "மர்ஜாவான்", 2023 ஆம் ஆண்டு டைகர் 3 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இவர்களது குடும்பம் ஒரு பால் பண்ணையை நடத்தி வந்தனர். வரீந்தரின் தம்பியும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
வரீந்தரின் தோள்பட்டைக்கும் முழங்கைக்கும் இடையே உள்ள Biceps பகுதியில் பிரச்சினை ஏற்பட்டு அதற்காக அமிருதசரஸில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தார். இதையடுத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன் அவரது உயிர் பிரிந்தது. இவரது இறப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பாடிபில்டிங் போட்டிக்காக ஸ்பெயின் சென்ற போது ஹாலிவுட் நடிகர் அர்னால்ட்டே, வரீந்தரின் உடலை பார்த்து வியந்து பாராட்டியிருக்கிறாராம். பாடிபில்டர்கள் பெரும்பாலும் அசைவ உணவை சாப்பிடுவார்கள். ஆனால் வரீந்தரோ சைவ உணவை சாப்பிட்டே உடற்பயிற்சிகளை செய்து வந்தார்.
வரீந்தரின் மரணம் குறித்து பஞ்சாப் எம்பி சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா கூறுகையில், குமானின் மறைவு பஞ்சாபிற்கு ஒரு பெரிய இழப்பு. புகழ் பெற்ற பாடிபில்டர் தனது அர்ப்பணிப்பு, ஒழுக்கம், திறமையால் மாநிலத்திற்கு பெருமை சேர்த்தவர். குமானின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு மன தைரியத்தை எல்லாம் வல்ல இறைவன் கொடுக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
வரீந்தரின் இறப்புக்கு இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் பர்ஜத் சிங்கும் இரங்கல் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக உடற்பயிற்சி செய்யும் நேரத்தில் பலருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறப்பதை நாம் பார்த்திருக்கிறோம். உதாரணமாக கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், ஜிம்மில் உடற்பயிற்சி செய்துவிட்டு வந்த நிலையில்தான் மாரடைப்பு ஏற்பட்டது. அது போல் விளையாடும் போதும் சிலருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததை செய்திகளில் பார்த்துள்ளோம்.
நேற்று இருந்தவர் இன்று இல்லை, இன்று இருப்பவர் நாளை இல்லை என்ற நிலைதான் தற்போது உள்ளது. யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத சூழல் உள்ளது. வரீந்தரின் இறப்பு எப்படி ஏற்பட்டது, அவருக்கு ஏன் மாரடைப்பு வந்தது என்பது குறித்து ரசிகர்கள் விவாதித்து வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications