போல்டு இஸ் பியூட்டிபுல் வைரலாகும் லெஸ்பியன் விளம்பரம்
ஒரு தாய் தனது மகனுக்காக மாப்பிள்ளை தேடியது கடந்த வாரம் இணைய உலகில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அதுகுறித்து சாதகமாகவும், பாதகமாகவும் பலரும் கருத்து கூறினார்கள். இதேபோல, தன்பாலின ஈர்ப்புள்ள பெண்களைப் புரிந்துகொள்ளும் பெற்றோர்கள் நம் சமூகத்தில் அரிது. அந்த வகையில் லெஸ்பியன் என்று அழைக்கப்படும் தன்பாலின ஈர்ப்பு கொண்ட பெண்களைக் குறித்து சற்றும் விரசம் இன்றி மிகவும் இயல்பாக ஒரு விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த விளம்பரப்படம் சமூக வலைத்தளங்களில் ஹிட் அடித்துள்ளது. அனைவராலும் பார்க்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.
ஒரு பாலின உறவுக்கு நமது நாட்டில் சட்டப்பூர்வ அங்கீரம் கிடைக்கவில்லை. சமூகத்திலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஃபயர் திரைபடம் வந்த போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இந்த விளம்பரம் பலராலும் பார்க்கப்பட்டு பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
சமூகத்தில் மற்ற பாலினத்தவர்களைப் போலவே தாங்களும் வாழ்வதற்கான உரிமை கோரி மாற்று பாலினத்தவர்கள் காத்திரமாக போராடி வரும் காலமிது. இதை உணர்த்தும் வகையில்
பெங்களூருவைச் சேர்ந்த விளம்பர நிறுவனம் இதனை உருவாக்கியுள்ளது. வழக்கம்போல வரும் விளம்பரங்களுக்கு மத்தியில் இது சற்றே வித்தியாசமாக இருக்கிறது. இதை பிரபல ஷாப்பிங் வலைதலமான மிந்த்ரா பேஷன் நிறுவனம் யூ டியூபில் பிரபலப்படுத்தி வருகிறது. பேஸ்புக், யூ டியூப் என்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
|
ரசிக்கும் பார்வையாளர்கள்
இந்த வீடியோவை இதுவரை பல லட்சக்கணக்கானோர் பார்த்து, நேர்மறையான கமென்டுகள் மற்றும் ஷேர்கள் மூலமாக தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

துணிச்சலான விளம்பரம்
இது குறித்து கருத்து கூறியுள்ள எல்.ஜி.பி.டி ( லெஸ்பியன்,கே,பைசெக்சுவல் மற்றும் திருநங்கைகள்) உரிமைகளுக்காக போராடும் சமூக ஆர்வலர் அசோக்ரோவ் கவி, "இது மிகவும் துணிச்சலான விளம்பரம் என்கிறார்.
லெஸ்பியன் தம்பதிகள்
உலகம் முழுவதும் லெஸ்பியன்கள் செய்திகளில் இடம்பெறுகின்றனர். தனக்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொண்டு தங்கள் உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். லெஸ்பியன் தம்பதிகளும் மற்றவர்களைப் போலவே மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். இதை லட்சக்கணக்கானவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்." என்றும் கூறியுள்ளார் அந்த சமூக ஆர்வலர்.
|
பாராட்டும் வலைஞர்கள்
மூன்று நிமிடங்கள் குறும்படம் போல ஓடும் இந்த விளம்பரம் பார்வையாளர்களிடையே வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனவேதான் நேர்மறையான கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். ஏற்கனவே பாஸ்ட்டிராக் விளம்பரம் ஓரினச்சேர்கையாளர்களை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல தனிஷ்க் விளம்பரம் மறுமணத்தை வலியுறுத்துவதாக இருந்தது. தற்போது அடுத்த நகர்வாக இந்த போல்ட் இஸ் பியூட்டிபுல் லெஸ்பியன் பெண்களைப் பற்றி கூறுவதாக அமைந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications