தினம் ஒரு விசித்திர கருத்து.. ஷாக் உத்தரவுகள்... அதிர வைக்கும் நாக்பூர் கோர்ட்
நாக்பூர்: பாலியல் குற்றங்கள், அதிலும் போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற அல்லது குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு ஆதரவாக தினம் ஒரு அதிர்ச்சி உத்தரவுகளை பிறப்பித்து, பிரபலமடைந்து வருகிறது மும்பை ஐகோர்ட்டின் நாக்பூர் கிளை.
இந்த கோர்ட்டில் போக்சோ சட்டத்தின் கீழ் தினம் ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. கடந்த 2 நாட்களாக சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர்கள், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் சர்ச்சைக்குரிய வகையில் நீதிபதிகள் உத்தரவுகளை விதித்தனர். போக்சோ சட்டத்தின் வரையறைகள் குறித்து நீதிபதிகள் கூறிய கருத்து அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்நிலையில் இதே போன்று இன்று மேலும் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. இதுவும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் தொடர்ந்த வழக்கு. இதில் குற்றம்சாட்டப்பட்டவரின் தண்டனையை பெண் நீதிபதி ஒருவர் மாற்றி உள்ளார்.

நடந்தது என்ன?
2013 ம் ஆண்டு ஜூலை மாதம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் தாய், சுராஜ் கசர்கர் என்பவர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். அதில் குற்றம்சாட்டப்பட்ட சிறுமி அளித்த வாக்குமூலத்தின்படி, சம்பவத்தன்று இரவு 9.30 மணியளவில் நான் எனது வீட்டில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தேன். எனது தம்பி தரையில் தூங்கிக் கொண்டிருந்தான். இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக எனது தாய் வெளியே சென்றிருந்தார். அந்த சமயத்தில் மது போதையில் இருந்த சுராஜ், எனது வீட்டிற்குள் நுழைந்தான். விழித்துக் கொண்ட நான் சத்தம் போட முயன்ற போது அவன் என் வாயை அடைத்து விட்டான். பிறகு அவனது ஆடைகளை களைந்த அவன், எனது ஆடைகளையும் களைந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தான். அதன் பின் தனது ஆடைகளை எடுத்துக் கொண்டு அவன் ஓடி விட்டான். இந்த கொடுமை பற்றி எனது தாயிடம் கூறி, இருவரும் போலீசில் புகார் அளித்தோம் என்றார்.

10 ஆண்டு சிறை தண்டனை
இது தொடர்பான வழக்கை விசாரித்த சிறப்பு விசாரணை நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர் தரப்பில் பாலியல் பலாத்காரம் மற்றும் கிரிமினல் குற்றங்கள் நடந்ததை நிரூபித்துள்ளனர். ஆனால் குற்றம் நடந்த சமயத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 18 வயதிற்கு கீழான வயதுடையவர் என்பதை நிரூபிக்க தவறி விட்டனர் என தெரிவித்து, குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

ஐகோர்ட் பெஞ்ச் நீதிபதி கூறியது என்ன
இதனை எதிர்த்து குற்றவாளி தரப்பில் ஐகோர்ட் நாக்பூர் கிளையில் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா கனிதிவாலா, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் மற்றும் மருத்துவ ஆதாரங்கள் இரண்டிலும் சிறுமி 18 வயதிற்கு கீழ் உடையவர் என்பதை நிரூபிப்பதற்கு அவரது பிறப்பு சான்றிதழ் இணைக்கப்படவில்லை. மேலும் பலவந்தப்படுத்திய போது இரு தரப்பிற்கு இடையே சண்டை ஏதும் நிகழ்ந்ததாக தெரியவில்லை. மருத்துவ அறிக்கையின்படி, தடுக்க முயன்ற போது சண்டை நடந்து, காயம் ஏதும் ஏற்படவில்லை. இது இருவரின் சம்மதத்தின் பேரிலேயே உறவு ஏற்பட்டதாக குற்றவாளி தரப்பில் வழக்கறிஞர் கூறுகிறார். குறுக்கு விசாரணையில், பலாத்காரம் நடந்தது உண்மை. அது வரை தனது தாய் வரவில்லை என்றார். இதை ஏற்க முடியாது என்றார்.

நீதிபதியின் வினோத கருத்து
பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலம் இயற்கையான மனித இயல்பிற்கு மாறானது. ஒரு மனிதனால் எவ்வாறு ஒரே சமயத்தில், பெண்ணின் வாயை மூடி, தனது ஆடைகளை களைந்து, பெண்ணின் ஆடைகளையும் களைந்து பலாத்காரம் செய்ய முடியும். தனி ஒரு மனிதனாக இது முடியா காரியம். அதுவும் எந்த ஒரு சண்டையும் நடக்காமல் எவ்வாறு நடைபெற்றிருக்க முடியும் என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுள்ளார். மேலும் சரியாக நிரூபிக்கப்படாத இவ்வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்துள்ளது ஏற்க முடியாது எனக் கூறி குற்றவாளியின் தண்டனையை குறைத்து உத்தரவிட்டுள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications