மே 8ம் தேதி வரை சல்மான் கானுக்கு இடைக்கால ஜாமீன் அளித்தது பாம்பே ஹைகோர்ட்!
மும்பை: பாம்பே உயர்நீதிமன்றத்தில் நடிகர் சல்மான் கான் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த பெஞ்ச், அவரை மே 8ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்தது. மேலும் மே 8ம் தேதி வரை அவருக்ுக இடைக்கால ஜாமீனும் அளித்து உத்தரவிட்டது.
இதையடுத்து 2 நாட்களுக்கு சிறைக்குப் போவதிலிருந்து தப்பியுள்ளார் சல்மான் கான். ஜாமீன் மனு மீது சல்மான் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜரானார்.

முன்னதாக 2002ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது மும்பை செஷன்ஸ் கோர்ட்.
இதையடுத்து போலீஸார் சல்மான் கானை தங்களது கஸ்டடியில் எடுத்தனர். இதையடுத்து சல்மான் கான் சார்பில் பாம்பே உயர்நீதிமன்றத்தில் உடனடியாக ஜாமீன் கோரி மனு செய்யப்பட்டது. இந்த மனு இன்று மாலை 4.30 மணியளவில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. சல்மான் கான் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜரானார்.
மேலும் மும்பை செஷன்ஸ் கோர்ட் பிறப்பித்த தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரியும், அப்பீல் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
ஜாமீன் மனுவை விசாரித்த கோர்ட், சல்மான் கானை மே 8ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து அவருக்கு அந்த தேதி வரை இடைக்கால ஜாமீன் அளித்து உத்தரவிட்டனர்.
சல்மான் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணையும் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்று சல்மானின் மனு மற்றும் அப்பீல் மனு விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications