மும்பையில் 17-ந் தேதி இறைச்சி விற்பனைக்கு அனுமதி அளித்தது ஹைகோர்ட்
மும்பை: மும்பையில் வரும் 17-ந் தேதி இறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்ட அரசின் தடை உத்தரவை மும்பை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது. இருப்பினும் அன்றைய நாளில் விலங்குகளை கொல்ல விதிக்கப்பட்ட தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஜெயின் சமூகத்தினரின் பர்யூஷன் விரத காலத்தை முன்வைத்து மும்பை மாநகராட்சி இறைச்சி விற்பனைக்கு தடை விதித்தது. இத்தடை உத்தரவு கடும் சர்ச்சையை கிளப்பியது.

இந்தத் தடைக்கு எதிராக பாம்பே மட்டன் டீலர்கள் சங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனூப் வி.மோதா, அஜ்மத் சையது ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசின் உத்தரவு நாட்டின் மதச்சார்பின்மை மற்றும் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. ஒரு பிரிவு மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக் கூடியது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து அரசின் உத்தரவுக்கு நீதிபதிகள் தடை விதித்தனர். ஆனால், அந்நாளில் விலங்குகளை கொல்வதற்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் இறைச்சிக் கூடங்களை மூடும் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.
மேலும் நீதிபதிகள், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சிக்கு மட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும். மீன், முட்டை அசைவம் இல்லையா? இத்தடை கிளப்பியுள்ள அரசியல் சர்ச்சையானது மக்களின் உணவு பழக்கவழக்கங்களை வைத்து அரசியல் செய்யப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது. 2004-ம் ஆண்டு முதல் மகாராஷ்டிரா அரசு ஜெயின் திருவிழாவை ஒட்டி இறைச்சி விற்பனைக்கு இரண்டு நாட்களுக்குத் தடை விதித்திருந்தாலும், அது தீவிரமாக கடைபிடிக்கப்படவில்லை என்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications