எனக்கு குழந்தை பிறந்திருச்சு.. செத்துடுச்சு.. இந்த பையில்தான் மறச்சு வச்சிருக்கேன்.. அலற விட்ட மாணவி

புத்தக பையில் குழந்தையின் சடலத்தை மறைத்து வைத்த பெண்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    New born baby Body was found inside a college bag in kerala

    இடுக்கி: "எனக்கு குழந்தை பொறந்து திடீர்னு இறந்துடுச்சு.. அதை இந்த காலேஜ் பையில்தான் மறைச்சு வெச்சிருக்கேன்.. இங்க பாரு.." என்று ஒரு வாட்ஸ்அப்பில் தோழியின் மெசேஜ் & போட்டோ வரவும் அலறிவிட்டார் அந்த பெண்!

    கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள வாத்திக்குடி பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண் ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

    கட்டப்பனையில் உள்ள அரசு கல்லூரியில் எம்எஸ்ஸி படித்து வருகிறார். இந்நிலையில் திடீரென தனது தோழிக்கு போன் செய்து, "எனக்கு குழந்தை ஒன்னு பிறந்து திடீர்னு இறந்துடுச்சு.. வீட்டுக்குத் தெரியாது. அதனால இந்த காலேஜ் பேக்கில்-லேயே வெச்சிட்டு சுத்திட்டு வெச்சிருக்கேன். அப்பறம் எடுத்து தூர போடணும். ஆனா அதுக்கு உன் உதவி எனக்கு வேணுமே" என்று சொல்லி உள்ளார்.

    சடலம் போட்டோ

    சடலம் போட்டோ

    இதை கேட்டு அந்த தோழி முதலில் சிரித்துள்ளார். ரம்யா சொல்வதை நம்பவும் இல்லை. இதனால் ரம்யா உடனே வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பி, கூடவே ஒரு போட்டோவையும் அனுப்பினார். உண்மையிலேயே ஒரு இறந்த குழந்தையின் போட்டோவை பார்த்ததும் அந்த பெண் அலறிவிட்டார். புத்தகம் கொண்டு வரும் அந்த பையில் குழந்தையின் சடலம் கிடந்தது.

    ரம்யா

    ரம்யா

    உடனடியாக, இதை பற்றி போலீஸுக்கும் ரம்யாவின் குடும்பத்துக்கும் தகவல் சொன்னார். போலீசாரும் விரைந்து வந்து, ரம்யாவின் பையை வாங்கி பார்த்தனர். அப்போது பையில், ஒரு பிளாஸ்டிக் கவரில் சுருட்டப்பட்டிருந்தது குழந்தையின் சடலம்.. ரம்யாவிடம் அப்போதே விசாரணையை ஆரம்பித்தனர்.

    இளைஞன்

    இளைஞன்

    இதை பற்றி ரம்யா போலீசில் சொல்லும்போது, "என்னுடன் படித்த ஒரு இளைஞனை காதலித்தேன். ஆனால் அவன் என்னை விட்டுவிட்டு, வேறு ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டான். கொஞ்ச நாளில் அந்த மனைவியை விட்டு பிரிந்துவிட்டான். இதனால் நாங்கள் திரும்பவும் காதலிக்க தொடங்கினோம். அதில் நான் கர்ப்பம் ஆகிவிட்டேன். இந்த விஷயத்தை காதலனிடம் போய் சொன்னேன். அவன் உடனே போய் தற்கொலை செய்து கொண்டான்.

    குறைபிரசவம்

    குறைபிரசவம்

    எவ்வளவோ முயற்சி செய்தும், என்னாலும் குழந்தையை கலைக்க முடியவில்லை. அதனால் யாருக்கும் தெரியாமல் இந்த விஷயத்தை மறைத்து வைத்தேன். ஆனால் 6 மாச கர்ப்பமாக இருந்த எனக்கு திடீரென போன செவ்வாய்க்கிழமை குறைபிரசவத்தில் குழந்தை பிறந்துவிட்டது. வீட்டு பாத்ரூமில்தான் அந்த குழந்தை பிறந்தது. பிறக்கும்போதே அது இறந்தும்விட்டது.

    மறைத்து வைத்தேன்

    மறைத்து வைத்தேன்

    இந்தசமயத்தில் எனக்கு காலேஜில் எக்ஸாம் நடப்பதால், வேறு வழியில்லாமல் போக நேர்ந்தது. அதனால், வீட்டில் எங்கியும் குழந்தையை வைக்க முடியாமல், காலேஜ் கொண்டு போகும் பையில்தான் மறைத்து வைத்து கொண்டு போய் வந்தேன். ஒருவழியாக இதை வீசி எறியலாம் என்று உதவி கேட்டபோதுதான் இப்படி மாட்டிக் கொண்டேன்" என்றார்.

    விசாரணை

    விசாரணை

    இதையெல்லாம் கேட்டு போலீசார் அதிர்ந்துவிட்டனர். உண்மையிலேயே குழந்தை இறந்துதான் பிறந்ததா என தெரியவில்லை என்பதால், போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி உள்ளனர். ஒருவேளை குழந்தையை அவர் கொலை செய்தது உறுதியானால் இளம்பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது போலீஸ் தரப்பு. காலேஜுக்கு புத்தக பையில் இறந்த குழந்தையை கொண்டு போன சம்பவம் கேரளாவில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் தந்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+