12 வருடம் காத்திருந்து அப்பாவைக் கொன்றவரைப் போட்டுத் தள்ளி உடலை 12 துண்டாக வெட்டிய மகன்
மொராதாபாத்: உத்திரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் தனது தந்தையை கொன்ற நபரை 12 வருடம் காத்திருந்து, மகன் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொலையைச் செய்த நபரின் வயது 24 ஆகும். 12 வயதாக இருந்தபோது இவரது தந்தையை ஒருவர் கொலை செய்தார். அவரைத்தான் தற்போது இப்படி வித்தியாசமாக பழி தீர்த்துள்ளார் இந்த இளைஞர்.

கொலை செய்து உடலைத் துண்டு துண்டாக வெட்டிய பிறகு செய்தியாளர்களையும் அழைத்துப் பேசியுள்ளார் இந்த நபர். அதன் பின்னர் அவரைப் போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து எஸ்பி ராம் சுரேஷ் யாதவ் கூறுகையில், "தனது குற்றத்தை இவர் ஒத்துக் கொண்டுள்ளார். இவர் பயன்படுத்திய செல்போன், சிம் கார்டு உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன. இவரை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றார்.
இந்த நபரின் பெயர் ஆலம் கான். இவர் போலீஸ் நிலையித்தில் கூடிய செய்தியாளரக்ளிடம் பேசுகையில், "எனது கனவு நிறைவேறி விட்டது. சந்தோஷமாகப் போகிறேன்" எனக் கூறினார்.
டிசம்பர் 16ம் தேதி இந்த சம்பவம் நடந்தது. கொலை செய்யப்பட்ட நபரை தனது வீட்டுக்கு வரவழைத்து முதலில் மது அருந்தச் செய்துள்ளார் ஆலம்கான். பின்னர் வீட்டில் இருந்த டேப் ரிக்கார்டரை சத்தமாக வைத்துள்ளார். அதன் பிந்னர் கத்தியை எடுத்துக் குத்திக் கொலை செய்தார்.
பிறகு கத்தியால் உடலை 12 துண்டுகளாக வெட்டியுள்ளார். தந்தையைக் கொலை செய்து 12 ஆண்டுகள் ஆனதைக் குறிப்பிடும் வகையில் இவ்வாறு அவர் செய்துள்ளார். பிறகு அதை பாலத்தீன் பையில் போட்டு ராம்கங்கா நதிக் கரையில் போட்டு விட்டார். அதன் பின்னர் தான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்துள்ளார் ஆலம்.
தற்போது கொலை செய்யப்பட்டுள்ள நபர் ஆலம் தந்தையின் குடும்ப நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், என்ன காரணத்திற்காக ஆலமின் தந்தை கொலை செய்யப்பட்டார் என்பது குறித்த விபரங்கள் இல்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications