வெற்றி துரைசாமியின் நிலை என்ன? நதியில் கிடைத்த மூளை திசுக்கள்.. டிஎன்ஏ முடிவுகள் நாளை வர வாய்ப்பு
சிம்லா: வெற்றி துரைசாமி சென்ற கார் விபத்துக்குள்ளாகிய இடமான சட்லஜ் ஆற்றங்கரையோரம் மனித மூளையின் திசுக்கள் மற்றும் ரத்த மாதிரிகள் கிடைத்து இருந்த நிலையில் அதனை போலீசார் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி இருந்தனர். இந்த நிலையில் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் நாளை வெளியாகும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும் அதிமுக முன்னாள் நிர்வாகியுமான சைதை துரைசாமியின் ஒரே மகன் வெற்றி துரைசாமி. வெற்றி துரைசாமி தொழில் அதிபர் ஆவார். பிரபல இயக்குனர் வெற்றிமாறனிடம் பயிற்சி பெற்ற வெற்றி துரைசாமி, கடந்த 3 நாட்களுக்கு முன்பு இமாசல பிரதேசத்தில் உள்ள லடாக் பகுதிக்கு சுற்றுலா சென்றார். வெற்றி துரைசாமியுடன் அவரது உதவியாளரான கோபிநாத் என்பவரும் உடன் சென்றிருந்தார்.

சுற்றுலாவை முடித்து விட்டு சென்னை திரும்புவதற்காக விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டு வந்துகொண்டிருந்த போது டிரைவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரனமாக கார் தாறுமாறாக ஓடி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சட்லஜ் ஆற்றுக்குள் கார் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில், கார் ஓட்டுநர் டென்சின் சடலமாக மீட்கப்பட்டார். கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டார்.
ஆனால், காரில் பயணம் செய்த வெற்றியின் நிலை என்ன என்பதுதான் தெரியவில்லை. வெற்றி துரைசாமியை போலீசார் தீவிரமாக தேடினர். விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும் சைதை துரைசாமி இமாச்சல் பிரதேசம் விரைந்தார். மேலும் தன் மகனை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாகவும் கூறியிருந்தார். தொடர்ந்து இன்று 7வது நாளாக போலீசார் வெற்றி துரைசாமியை தேடி வருகின்றனர்.
சைதை துரைசாமியின் மகன் உடலை தேடும் பணி 7-வது நாளாக நீடித்து வருகிறது. இதனிடையே, கடந்த 6 ஆம் தேதி சட்லஜ் நதியின் கரையோரம் உள்ள பாறை இடுக்குகளில் இருந்து மூளையின் திசுக்கள் கண்டெடுக்கப்பட்டன. அதேபோல், ரத்த மாதிரியும் எடுக்கப்பட்டது. இந்த திசுக்கள் மற்றும் ரத்த மாதிரிகளை இமாசல பிரதேச போலீசார் டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், டிஎன்ஏ பரிசோதனை முடிவுகளின் விவரம் நாளை வெளியாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இதற்காக வெற்றி துரைசாமியின் பெற்றோரின் டிஎன்ஏ விவரங்களும் பெறப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து வெற்றி துரைசாமியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நாளை வெற்றி துரைசாமியை கண்டுபிடித்துவிடுவோம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications