புலியை முறத்துல துரத்துனது பழசு.. சிங்கத்தை பிரம்பால விரட்டுறது புதுசு.. வைரல் வீடியோ!
கன்றுக்குட்டியைப் பாதுகாக்க சிங்கத்தை நேருக்கு நேர் நின்று விரட்டிய விவசாயியின் வீடியோ வைரலாகியுள்ளது.
காந்திநகர்: குஜராத்தில் கன்றுக்குட்டியைக் காப்பாற்ற விவசாயி ஒருவர் சிங்கத்தை பிரம்பால் அடித்துத் துரத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.
பழங்காலத்தில் புலி ஒன்றை வீரத் தமிழச்சி ஒருவர் முறத்தால் அடித்து விரட்டினார் என்ற கதையை நாம் கேட்டிருப்போம். அது எந்தளவுக்கு சாத்தியம் என நம்மில் பலருக்கு சந்தேகமும் ஏற்பட்டிருக்கலாம்.
ஆனால், மனதில் துணிவிருந்தால் மெல்லிய குச்சியால் கூட பெரிய மிருகங்களை பயப்பட வைக்க முடியும் என்பதை குஜராத்தில் நடந்த இந்தச் சம்பவம் வீடியோ ஆதாரத்துடன் நமக்குக் காட்டுகிறது.

சிங்கம்:
சிங்கங்களுக்கு பேர் போனது குஜராத்தின் கிர் வனப்பகுதி. அதன் அருகில் உள்ளது அம்ரேலி.நேற்று முன்தினம் இரவு, அங்கு கால்நடைகளை வேட்டையாடுவதற்காக சிங்கம் ஒன்று வந்துள்ளது. அப்போது கன்றுக்குட்டி ஒன்றை தாக்க முற்படுகிறது அந்த சிங்கம்.

பிரம்படி:
சத்தம் கேட்டு ஓடி வந்த வாதர் என்ற விவசாயி, சிங்கத்தைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். கையில் பிரம்புடன் அவர் கூச்சல் போடுகிறார். பின்னர் சிங்கத்தை நோக்கி அவர் பிரம்பை வீச, அது திரும்பி ஓடுகிறது. இந்தக் காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.

கோபம்:
இந்த சம்பவம் தொடர்பாக வாதர் கூறுகையில், "நான் வீசிய பிரம்பு சிங்கத்தின் தலையில் பட்டது. அதனால் அது கன்றுக்குட்டியை அப்படியே விட்டு விட்டு எனது வீட்டின் காம்பவுண்ட் சுவரைத் தாண்டி ஓடி விட்டது. சம்பந்தப்பட்ட கன்றுக்குட்டி பிறந்து ஐந்து மாதம் தான் ஆகிறது. எனக்கு மிகவும் பிடித்த அந்த கன்றுக்குட்டியை சிங்கம் தாக்குவதைக் கண்டு எனக்கு கடும் கோபம் வந்துவிட்டது" எனத் தெரிவித்துள்ளார்.

வேதனை:
இப்படி சிங்கம் ஊருக்குள் புகுந்து தாக்குவது அப்பகுதியில் ஒன்றும் புதிதல்ல. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சிங்கங்கள் ஊருக்குள் வந்து கால்நடைகளை வேட்டையாடுவது வழக்கம் தானாம். அந்தப் பகுதியில் நான்கு சிங்கங்கள் இருக்கிறதாம். சிங்கங்களோடு வாழ்க்கை நடத்துவதே தங்களுக்கு வாடிக்கையாகி விட்டது என வேதனையோடு கூறுகிறார் வாதர்.

வைரல் வீடியோ:
எனினும், கன்றுக்குட்டிக்காக தனது உயிரை பணயம் வைத்து சிங்கத்தை நேருக்கு நேர் சந்தித்த விவசாயியின் தைரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இணையத்தில் இந்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications