இஸ்ரேல்- காஸா மோதல்: பிரதமர் நரேந்திர மோடி கவலை
டெல்லி: இஸ்ரேல் மற்றும் காஸா பகுதியில் நிகழ்ந்து வரும் மோதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காஸா பகுதிகளில் மோதல் நிகழ்ந்து வருகிறது. இதில் இஸ்ரேல் நடத்தி வரும் கண்மூடித்தனமான வான்வழித் தாக்குதல்களினால் 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் பிரிக்ஸ் நாடுகளின் உச்சிமாநாட்டுக்கு பிரேசில் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்சனை குறித்தும் பேசினார்.
இஸ்ரேல்- பாலஸ்தீன மோதல் பற்றி மோடி பேசியதாவது:
மேற்கு ஆசியாவில் நிலையற்ற தன்மை உருவாகி வருவது கவலை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட நாடுகளை நாம் தொடர்ந்து வெறுமனே வேடிக்கை பார்ப்பது கடுமையான பின்விளைவுகளை உருவாக்கும்.
இந்த மோதல், உலக அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும். ஈராக்கில் நடந்து வரும் மோதலை முடிவுக்கு கொண்டு வர நாம் கூட்டாக என்ன செய்யலாம் என்று பிரிக்ஸ் நாடுகள் ஆராய வேண்டும்.
வளைகுடாநாடுகளில் வாழும் 70 லட்சம் இந்தியர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவதால் இந்தியா குறிப்பாக கவலைப்படுகிறது.
இவ்வாறு நரேந்திர மோடி தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications