For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடித்து விட்டு மணமேடைக்கு வந்த மாப்பிள்ளை... நீ வேணாம் போ என்று நிராகரித்த மணமகள்

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் மணமகன் குடித்து விட்டு மணமேடைக்கு வந்ததால், தாலி கட்டிக் கொள்ள மறுத்து, திருமணத்தையே நிறுத்தியுள்ளார் பெண் ஒருவர்.

உத்தரப்பிரதேச மாநிலம் மகோபா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் நடைபெற இருந்த திருமணத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தடபுடலாக நடந்து வந்தது. அப்போது, மேடை ஏறி வந்த மணமகள், நன்கு மதுபோதையில் மணமகன் அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

Bride walks out of wedding after finding groom in drunk state

பின், திருமணத்தன்றே குடித்து விட்டு அமர்ந்திருக்கும் மாப்பிள்ளைக்கு மனைவியாக தனக்கு விருப்பமில்லை என்று கூறி, மாலையைக் கழற்றி வைத்து விட்டார். இதனால் நடக்க இருந்த திருமணம் நின்று போனது.

இதனால் ஆத்திரமடைந்த மாப்பிள்ளை வீட்டார், மணமகள் மீது போலீசில் புகார் அளிக்கச் சென்றனர். பின்னர் போலீசாரின் அறிவுரையால் அவர்கள் புகார் எதுவும் தரவில்லை.

ஏற்கனவே, உத்தரப்பிரதேசத்தில் விதவிதமான காரணங்களைக் கூறி மணமகள்கள் திருமணத்தை நிறுத்துவது வாடிக்கையாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பணத்தை சரியாக எண்ணத் தெரியவில்லை என்றும், கணக்கு சரியாக போடத் தெரியவில்லை என்றும் சில பெண்கள் திருமணத்தை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

English summary
A girl in a village in Mahoba district stunned members of her family and community when she refused to marry the groom because she found him in an inebriated state just ahead of the wedding ceremony. The groom's side later approached the police but was advised not to pursue the case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X