Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவா பீச்சில் பிரிட்டன் பிரதமர் மனைவி.. கையில் செருப்பு.. சாதாரண டீசர்ட்டுடன் மகள்களோடு உற்சாகம்

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மனைவி அக்சதா மூர்த்தி தனது 2 மகள்களுடன் கோவா சென்று சாதாரணமாக நடமாடி நீர் விளையாட்டுகளில் பங்கேற்றார்.

Subscribe to Oneindia Tamil

பனாஜி: பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் உள்ளார். அவரது மனைவி அக்சதா மூர்த்தி தனது 2 மகள்களுடன் கோவாவில் சாதாரண டீசர்ட் அணிந்து கையில் செருப்பை வைத்து கொண்டு மகள்களுடன் நீர் விளையாட்டு விளையாடிய வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் சாதாரண டீசர்ட் அணிந்து மக்களோடு மக்களாக பீச்சில் கையில் செருப்பை எடுத்து கொண்டு அவர் குடும்பத்துடன் நடந்து சென்ற படமும் இணையதளங்களில் வெளியாகி உள்ளது.

பிரிட்டன் பிரதமராக இந்திய ரிஷி சுனக் உள்ளார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அதாவது ரிஷி சுனக்கின் தாத்தாவும் பாட்டியும் இந்தியாவின் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். ரிஷி சுனக்கின் தந்தை பெயர் யாஷ்வீர். தாய் உஷா. இந்த தம்பதி பிரிட்டனில் வசிக்கின்றனர்.

இந்த தம்பதியின் மகனான ரிஷி சுனக் எம்பியாக இருந்தார். அதன்பிறகு முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர் தற்போது பிரதமராக பதவி வகித்து வருகிறார். ரிஷி சுனக்கின் மனைவி பெயர் அக்சதா மூர்த்தி.

இன்போசிஸ் நிறுவனரின் மகள்

இன்போசிஸ் நிறுவனரின் மகள்

ரிஷி சுனக்கின் மனைவி அக்சதா மூர்த்தி கர்நாடகாவை சேர்ந்தவர். இன்போசிஸ் இணை நிறுவனரான நாராயண மூர்த்தியின் மகள் தான் இந்த அக்சதா மூர்த்தி. அமெரிக்காவில் படித்தபோது ரிஷி சுனக்கிற்கும், அக்சதா மூர்த்திக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரின் திருமணமும் கடந்த 2009ல் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு அனோஷ்கா மற்றும் கிருஷ்ணா என 2 மகள்கள் உள்ளனர்.

இந்தியா வந்த அக்சதா

இந்தியா வந்த அக்சதா

இந்நிலையில் தான் அக்சதா மூர்த்தி தனது 2 மகள்களுடன் இந்தியா வந்துள்ளார். மேலும் அவர் குடும்பத்துடன் கோவா சென்றுள்ளார். தெற்கு கோவாவின் பெனாவ்லிம் கடற்கரை பகுதிக்கு அக்சதா மூர்த்தி தனது இரு மகள்கள், தாய் சுதா மூர்த்தி, தந்தை நாராயண மூர்த்தி உள்ளிட்டோருடன் சென்றுள்ளார். அங்குள்ள நீர் விளையாட்டுகளில் அவர் தனது மகள்களுடன் மகிழ்ச்சியாக பங்கேற்றார். சாதாரண டீசர்ட், டிராக் பேண்ட் அணிந்து கையில் செருப்பை எடுத்து கொண்டு சாதாரணமாக மக்களோடு மக்களாக அக்சதா மூர்த்தி நடந்து சென்றார். மேலும் அவரோடு சிலர் போட்டோ எடுத்து கொண்டனர்.

 வெளியான வீடியோ

வெளியான வீடியோ

முன்னதாக அக்சதா மூர்த்தி பீலே என்ற பிரான்சிஸ் பெர்னாண்டஸ் என்ற மீனவரிடம் பேசும் வீடியோ இணையதளங்களில் வெளியானது. இந்த வீடியோவில் அக்சதா மூர்த்தி, ‛‛நீர் விளையாட்டுக்கள் பாதுகாப்பானதா?'' என கேட்கிறார். இதற்கு பீலே, ‛‛100 சதவீதம் பாதுகாப்பானது. நீங்கள் விளையாட விரும்பினால் உங்களையும், உங்களது குடும்பத்தினரையும் பாதுகாப்பேன்'' என கூறுகிறார். இதையடுத்து அவர்கள் நீர் விளையாட்டுகளை விளையாடினர்.

‛டன்’ சொன்ன அக்சதா

‛டன்’ சொன்ன அக்சதா

இதுபற்றி பீலே கூறுகையில், ‛‛பிரிட்டன் பிரதமரின் மனைவியை நான் பார்த்துடன் அடையாளம் கண்டுகொண்டேன். அவர் என்னிடம் நீர் விளையாட்டு பாதுகாப்பான ஒன்றா? என கேட்டார். அதற்கு நான் பாதுகாப்பானது என கூறினேன். எங்கள் படகுகளில் ஏறியபோது பிரிட்டனில் கோவாவை சேர்ந்த ஏராளமானவர்கள் உள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? என பார்த்து கொள்ள கூறினேன். அதற்கு அவர் ‛டன்' என கூறினார். இந்த சந்திப்பு இனிமையான அனுபவமாகும்'' என மனம் மகிழ்ந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+