ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு இங்கிலாந்து மன்னிப்பு கேட்கும் தருணம் இது- பஞ்சாப்பில் லண்டன் மேயர்
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு இங்கிலாந்து அரசு மன்னிப்பு கேட்கும் தருணம் இது என லண்டன் மேயர் சாதிக் கான் வலியுறுத்தியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
அமிர்தசரஸ்: தேச விடுதலைப் போராட்டத்தின் போது பிரிட்டிஷ் அரசு நிகழ்த்திய ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு இங்கிலாந்து மன்னிப்பு கேட்க வேண்டிய தருணம் இது என லண்டன் மேயர் சாதிக் கான் வலியுறுத்தியுள்ளார்.
லண்டன் மேயர் சாதிக் கான், நல்லெண்ண பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார். அவர் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு சென்று இன்று வழிபாடு நடத்தினார்.

பின்னர் 379 தேச விடுதலைப் போராட்ட தியாகிகளை பிரிட்டிஷ் அரசு படுகொலை செய்த இடமான ஜாலியன் வாலாபாக் நினைவிடத்துக்கும் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சாதிக் கான், ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு இங்கிலாந்து மன்னிப்பு கேட்க வேண்டிய தருணம் இது என்றார்.












Click it and Unblock the Notifications