முறைப்படி பாஜகவில் சேர்ந்தார் எதியூரப்பா: பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
பெங்களூர்: தனது கர்நாடக ஜனதா கட்சியை பாஜகவுடன் இணைத்த ஒரு வாரம் கழித்து கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா இன்று பாஜகவில் முறைப்படி சேர்ந்தார்.
பாஜகவில் இருந்த எதியூரப்பா தனக்கு கட்சியில் முக்கியத்துவம் இல்லை என்று கூறி கடந்த 2012ம் ஆண்டில் கட்சியில் இருந்து வெளியேறினார். இதையடுத்து அவர் கர்நாடக ஜனதா கட்சியை துவங்கினார்.

தங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவித்த பிறகு பாஜக எதியூரப்பாவை அணுகியது. இம்முறை நடந்த பேச்சுவார்த்தை வெற்றி பெற்ற பிறகு எதியூரப்பா தனது கட்சியை கடந்த வாரம் பாஜகவுடன் இணைத்தார். இதையடுத்து அவர் கட்சியில் முறைப்படி இணைய ஒரு தேதியை முடிவு செய்யுமாறு அவருக்கு பாஜக கோரிக்கை விடுத்தது.
அதன்படி அவர் இன்று பாஜகவில் தன்னை முறைப்படி இணைத்துக் கொண்டார். பெங்களூரில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு வந்த எதியூரப்பாவுக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரை வரவேற்கும் விதமாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
எதியூரப்பா பாஜகவில் மீண்டும் இணைந்தாலும் வரும் லோக்சபா தேர்தலில் அவர் போட்டியிட மாட்டார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ












Click it and Unblock the Notifications