பாகிஸ்தானில் இருந்து துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஊடுருவிய ட்ரோன்.. சுட்டு வீழ்த்திய பி.எஸ்.எஃப்!
பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்களுடன் இந்திய எல்லைக்குள் வந்த ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
டெல்லி : பஞ்சாப் மாநிலத்தின் இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையை கடந்து சமீப நாட்களாக பாகிஸ்தான் டிரோன்கள் அடிக்கடி ஊடுருவி வருகின்றன. பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்களுடன் ஊடுருவிய டிரோன், எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் செக்டாரில் உள்ள, இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் நேற்று (மார்ச் 10) வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பகல் 1 மணி அளவில் மீண்டும் ஒரு பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஒரு டிரோன் மெல்டா கிராமத்தையொட்டிய இந்திய எல்லைக்குள் ஊடுருவியது. இதை கவனித்த எல்லை பாதுகாப்பு படையினர் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினர்.
சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த டிரோன் நபிநகர் கிராமத்தின் தோட்ட வயல்வெளியில் விழுந்தது. அந்த டிரோன் 6 இறக்கைகள் கொண்டது. அந்த டிரோனில் இணைக்கப்பட்டிருந்த ஏ.கே ரக துப்பாக்கி, 2 தோட்டா குப்பிகள் மற்றும் 40 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும், பஞ்சாப் அருகே உள்ள இந்திய பாகிஸ்தான் சர்வதேச எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியரை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்துள்ளதாக பிஎஸ்எஃப் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இதே பஞ்சாப் எல்லையில் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவரும், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரும் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றதைத் தொடர்ந்து எல்லை பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications