அமைச்சர் பதவி வேண்டும்.... பகுஜன் சமாஜின் ஒரே எம்எல்ஏ பிடிவாதம்!
கர்நாடகாவில் மஜத கட்சியுடன் கூட்டணி அமைத்த பகுஜன் சமாஜ் ஒரு தொகுதியில் வென்றது. பகுஜன் எம்எல்ஏ மகேஷ், அமைச்சர் பதவி கேட்கிறார்.
Recommended Video

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத ஆட்சி அமைந்தால் அமைச்சர் பதவியைத் தர வேண்டும் என்று கூட்டணி கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரே எம்எல்ஏவான மகேஷ் நிர்ப்பந்தம் கொடுக்கத் துவங்கியுள்ளார்.
கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பாஜக 104 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் 78, மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் 38 தொகுதிகளில் வென்றன. 2 இடங்களில் சுயேச்சைகள் வென்றனர்.

தனிப்பெரும்பான்மை இல்லாததால் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமியை முதல்வராக்குவதற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
20 தொகுதிகளில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி, ஒரு இடத்தில் மட்டும் வென்றது. கொல்லேகல் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் என் மகேஷ் வென்றார்.

மஜத மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தால், அதில் தனக்கு அமைச்சர் பதவியை தர வேண்டும் என்று மகேஷ் தற்போது கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக, மஜத தலைவர் தேவ கௌடாவுடன், பகுஜன் சமாஜ் தலைவர் மயாவதி பேசி வருவதாக அவர் கூறியுள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications