"பூஜ்ஜியம்”.. மாயாவதி கட்சி நிலைமை இப்படி ஆகிப்போச்சே.. 33 வருட ம.பி வரலாற்றில் மோசமான தோல்வி!
போபால்: மத்திய பிரதேசத்தில், மீண்டும் வென்று காங்கிரஸ் கட்சியை அலற வைத்துள்ளது ஒருபுறம் என்றால், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியையும் கூறுபோட்டுள்ளது பாஜக.
மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 17-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இங்கு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 116 இடங்களில் வெற்றி பெற வேண்டும். பாஜக நீண்ட காலமாக வலுவாக உள்ள மாநிலங்களில் ஒன்று மத்திய பிரதேசம். 2003 முதல் 2023 வரையிலான கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 19 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 114 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் 109 இடங்களில் பாஜகவும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், ஒரே ஆண்டில் எம்எல்ஏக்களின் அணி தாவலால் ஆட்சி பறிபோனது. இந்நிலையில், தற்போது மீண்டும் மத்திய பிரதேசத்தில் வெற்றியை உறுதி செய்து ம.பி எங்கள் கோட்டை என்று நிறுவியுள்ளது பாஜக.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே களம் காணும். எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள 'இந்தியா' கூட்டணி உட்பட எந்த அணியிலும் இணைய மாட்டோம் என அறிவித்தார் மாயாவதி. எனினும் பிறகு, கோண்ட் இன மக்களுக்காக போராடி வரும் ஜிஜிபி கட்சியுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தார்.
சமாஜ்வாதி கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிடவே விரும்பியது. ஆனால், அது நடக்காத நிலையில் 80 இடங்களில் தனித்துப் போட்டியிட்டது. சந்திரசேகர ஆசாத் தலைமையிலான ஆஸாத் சமாஜ் கட்சி 80 இடங்களிலும் ஆம் ஆத்மி கட்சி 69 இடங்களிலும் போட்டியிட்டன. இவை தவிர, இடதுசாரிக் கட்சிகள், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவையும் சில இடங்களில் போட்டியிட்டன.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் நிலவரப்படி தற்போது பகுஜன் சமாஜ் கட்சி 2 சீட்களில் முன்னிலை வகித்து வருகிறது. அக்கட்சியைச் சேர்ந்த பல்வீர் சிங், திமானி தொகுதியில், மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். எனினும், வாக்கு சதவீதத்தில், கடந்த முறையை விட பகுஜன் சமாஜ் கட்சி பெரிய வீழ்ச்ச்சியை சந்தித்துள்ளதாகத் தெரிகிறது.
மத்திய பிரதேசத்தை பொறுத்தவரை, ஒரு காலத்தில் 11 எம்.எல்.ஏக்கள் அக்கட்சிக்கு இருந்தனர். பின்னர் படிப்படியாக குறைந்த தற்போது 2 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர். இந்த முறை அந்த இரண்டு சீட்டும் பறிபோயுள்ளது. மேலும், வாக்கு சதவீதத்திலும் பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது பகுஜன் சமாஜ் கட்சி.

கடந்த 2008 மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சி பெற்ற வாக்குகள் 8.97 சதவிகிதம். 2013 தேர்தலில் அக்கட்சி பெற்றது 6.29 சதவீத வாக்குகள். கடந்த 2018 தேர்தலில், அக்கட்சி 5.08 சதவீத வாக்குகளைப் பெற்றது. தற்போதைய சூழலில் அக்கட்சி 3 சதவிகித வாக்குகளையே பெறும் நிலை உள்ளது. அதாவது, கடந்த தேர்தலில் பெற்றதில் இந்த முறை பாதி தான் கிடைக்கும் சூழல் உள்ளது.
1990 முதல், மத்திய பிரதேசத்தில் குறைந்தது 2 இடங்களையாவது வென்று வந்தது பகுஜன் சமாஜ் கட்சி. இந்த நிலை, படிப்படியாக தேய்ந்து, இந்த முறை 'பூஜ்ஜியம்’ எனும் நிலைக்கு வந்துள்ளது. அக்கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லாதது பகுஜன் சமாஜ் கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒருபக்கம், காங்கிரஸ் கட்சியை துடைத்தெறிந்துள்ள பாஜக, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி வாக்குகளையும் கூறுபோட்டுள்ளது. தனித்துக் களம் காணும் கட்சிகளை பாஜக சிதைப்பது இந்த தேர்தலிலும் நிகழ்ந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் ஏற்கனவே தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் மாயாவதிக்கு இது ஒரு அபாய மணி என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications