பட்ஜெட்: துறைமுக மேம்பாட்டுக்கு ரூ.11,635 கோடி: தூத்துக்குடியில் வெளிப்புறத் துறைமுகம்!
டெல்லி: துறைமுக மேம்பாட்டிற்கென ரூ 11,635 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். அதன்படி, தமிழகத்தில் தூத்துக்குடியில் வெளிப்புற துறைமுகம் ஒன்று அமைக்கப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
இன்று நாடாளுமன்றத்தில் 2014-15ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி. அப்போது அவர், துறைமுகங்களை இணைக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

ரூ 11,635 கோடி ஒதுக்கீடு...
இந்தாண்டு பட்ஜெட்டில் 16 துறைமுகங்களை மேம்படுத்துவதற்கென ரூ 11,635 கோடியை அருண்ஜெட்லி ஒதுக்கீடு செய்துள்ளார்.

வெளிப்புற துறைமுகம்...
இந்தியாவில் மொத்தம் 13 முக்கிய துறைமுகங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றான தூத்துக்குடியில் வெளிப்புற துறைமுகம் ஒன்று அமைக்கப் படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலைகள் மேம்பாடு...
மேலும், நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்படும் என அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.

நதி வழி வர்த்தகம்...
கடல் வழி வர்த்தகத்தைப் போலவே உள்நாட்டு நதிகள் வாயிலாகவும் வர்த்தகம் நடைபெற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications