வாடகை வீட்டில் வசிக்கும் வருமான வரிதாரருக்கு ரூ.60,000 வரை வரிச்சலுகை!
டெல்லி: வீட்டு வாடகைக்கான வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.24 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக 2016-17ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் வரை வருவாய் பெறுவோருக்கு தற்போது வருமான வரி விலக்கு வழங்கப்பட்டு வருகிறது. அது ரூ.3 லட்சம் வரை உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்புக்கு நடுவே இன்று மத்திய பட்ஜெட்டை ஜெட்லி தாக்கல் செய்தார்.

வருமான வரி விலக்கில் ஜெட்லி எந்த மாற்றமும் செய்யவில்லை என்றபோதிலும், வாடகை உச்சவரம்பில் மாற்றம் செய்துள்ளார். இது வருமான வரி தாக்கல் செய்வோருக்கு ஓரளவுக்கு பலன் தரும்.
ஜெட்லி கூறுகையில், சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசிப்போர், அலுவலகத்தில் வீட்டு வாடகை படி கிடைக்கப் பெறாதவர்கள் ஆண்டுக்கு ரூ.24 ஆயிரம் வரை வருமான வரி விலக்கு பெறமுடிகிறது. பெருகியுள்ள வாடகை உயர்வை கருத்தில் கொண்டு, வாடகை உச்சவரம்பை ரூ.60 ஆயிரமாக உயர்த்துகிறேன்.
வருமான வரி, 80ஜிஜி பிரிவின்படி 60 ஆயிரம் வரையிலான வாடகை செலவீனத்திற்கு வரி விதிக்கப்படாது. இவ்வாறு ஜெட்லி தெரிவித்தார்.
அதாவது, வருமான வரி தாக்கல் செய்யும்போது, இனிமேல் வாடகையாக ரூ.60 ஆயிரம் வரை கணக்கு காட்ட முடியும். மொத்த வருமானத்தில் இருந்து அந்த 60 ஆயிரமும் கழிக்கப்பட்டு எஞ்சிய தொகைக்குதான் வருமான வரி விதிக்கப்படும் என்பதால், மாத சம்பளக்காரர்களுக்கு இதனால் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும்.
அதேபோல மற்றொரு அறிவிப்பும், முக்கியமானது. தற்போது, ஆண்டுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருவாய் பெறுவோருக்கு 15 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகையில் ரூ.2 ஆயிரத்தை மீண்டும் திருப்பித் தரும் நடைமுறை உள்ளது.
வருமான வரியின் 87ஏ பிரிவின்கீழ், இந்த திருப்பித்தரும் தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தியுள்ளார் ஜெட்லி. இதன்மூலம், வருமான வரி செலுத்துவோருக்கு ரூ.3 ஆயிரம் கூடுதலாக லாபம் கிடைக்கும். மொத்தம் 2 கோடி பேருக்கு பலன் கிடைக்கும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications