பட்ஜெட் கூட்டத் தொடர்: இன்று டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து விவாதிக்க இன்று டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இந்த மாத இறுதியில் துவங்கும் என்று கூறப்படுகிறது. 26 அல்லது 27ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், 28ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.

Budget session: All party meet in Delhi today

இந்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்துவது குறித்து விவாதிக்க இன்று டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. மேலும் பட்ஜெட் கூட்டத்தொடரின் தேதியை இறுதி செய்ய இன்று டெல்லியில் கேபினட் குழு கூட்டமும் நடைபெறுகிறது.

இன்றைய அனைத்துக் கட்சி கூட்டத்தில் கிடப்பில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரி மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை பட்ஜெட் கூட்டத் தொடரிலாவது நிறைவேற்ற ஆதரவு அளிக்குமாறு மத்திய அரசு எதிர்க்கட்சிகளை கேட்டுக் கொள்ள உள்ளது.

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மழைக்காலம் மற்றும் குளிர்கால கூட்டத் தொடர்களில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+