”பர்மா அட்டூழியம் ஒழிக” – மியான்மர் மக்கள் தொகை சட்டத்திற்கு எதிராக டுவிட்டரில் போர்க்கொடி
டெல்லி: மியான்மரில் சர்ச்சைக்குரிய மக்கள் தொகை சட்டம் அமலுக்கு வந்ததையும், அதனால் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் டுவிட்டரில் "#பர்மாஅட்டூழியம்ஒழிக என்ற ஹேஸ் டேக் பரவி வருகின்றது.
மியான்மரில் சர்ச்சைக்குரிய மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனால் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் சர்ச்சை எழுந்துள்ளது.
மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் சுகாதார வசதி மசோதா, மியான்மர் நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது.
Top trending #பர்மாஅட்டூழியம்ஒழிக pic.twitter.com/X0cDBY7w9B
— Oneindia Tamil (@thatsTamil) May 27, 2015 மக்கள் தொகை அதிகமுள்ள இடங்களில் பெண்கள், ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இடைவெளி விடுவதை இந்த சட்டம் கட்டாயம் ஆக்குகிறது.
இந்த சட்டத்தால் பெண்கள் மட்டுமல்ல மதம் மற்றும் இன சிறுபான்மையினரும் அடக்குமுறைக்கு ஆளாகும் ஆபத்துள்ளதாக எதிர்ப்பு கிளம்பியது.
பழமைவாத புத்த துறவிகளின் நிர்பந்தத்தின் பேரில் முஸ்லிம்களுக்கு எதிராக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சட்டம் உட்பட மியான்மர் அரசு திட்டமிட்டுள்ள 4 சட்டங்களை கைவிடவேண்டும், இதனால் சமூக அமைதி பாதிக்கும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கேட்டுக்கொண்டன.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டத்துக்கு மியான்மர் அதிபர் ஒப்புதல் வழங்கியுள்ளார். மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் அதிகமுள்ள இடங்களில் பிறப்பு இடைவெளி விதிமுறைகளை அமல்படுத்த பிராந்திய அதிகாரிகளுக்கு இந்த சட்டம் அதிகாரம் அளிக்கிறது.
இந்நிலையில் இச்சட்டத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையிலும், பர்மிய முஸ்லிம் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் டுவிட்டரிலும் #பர்மாஅட்டூழியம்ஒழிக என்ற ஹேஸ் டேக் டிரெண்டிங்கில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications