ராஜஸ்தானில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. பலி எண்ணிக்கை 32ஆக உயர்வு!
ராஜஸ்தானில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சவாய் மதோபூர் மாவட்டத்தில் பனாஸ் ஆறு பாய்கிறது. இன்று காலை சவாய் மதோப்பூரில் லால்காட்டுக்கு பேருந்து ஒன்று 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது.

துபி என்ற இடத்தில் பனாஸ் ஆற்றின் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. ஓட்டுநர் எவ்வளவோ போராடியும் பேருந்து பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு ஆற்றில் பாய்ந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இந்த விபத்தில் 27 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 5 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications