3வது ரவுண்டில் மாறிய ஆட்டம்.. பாஜகவுக்கு தண்ணி காட்டி தொகுதியை தட்டி பறித்தது திரிணாமுல் காங்கிரஸ்!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் துப்குரி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் திரினாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். முதல் சில சுற்றுகளில் பின் தங்கி இருந்த டி.எம்.சி வேட்பாளர், பாஜகவை முந்தி வென்றுள்ளார். கடைசி வரை போராடி தொகுதியை இழந்தது பாஜக.
உத்தர பிரதேசத்தின் கோசி, உத்தரகாண்டின் பாகேஷ்வர், கேரளாவின் புதுப்பள்ளி, மேற்கு வங்கத்தின் துப்குரி, ஜார்கண்டின் தும்ரி, திரிபுராவின் போக்சாநகர், தன்பூர் என இந்தியாவில் உள்ள 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை விறுவிறுப்பாகத் தொடங்கியது.

உத்தர பிரதேசத்தின் கோசி தொகுதியிலும், ஜார்கண்டின் தும்ரி, தன்பூர், திரிபுராவின் போக்ஸாநகர், உத்தரகாண்டின் பாகேஷ்வர் ஆகிய தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகளின் சார்பில் 'இந்தியா' கூட்டணி வேட்பாளர்கள் களமிறங்கினர். மேற்கு வங்கத்தின் துப்குரியிலும், கேரளாவின் புதுப்பள்ளியிலும் தனித்தனியாகப் போட்டியிட்டனர்.
மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் அமைந்துள்ள துப்குரி தொகுதியில் பாஜகவின் பிஷ்ணு பதாரே எம்.எல்.ஏவாக இருந்தார். இவர் இந்த ஆண்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணியின் வேட்பாளராக ஈஸ்வர் சந்திர ராய் போட்டியிட்டார். ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, துப்குரி பெண்கள் கல்லூரியின் பேராசிரியரான நிர்மல் சந்திர ராயை களமிறக்கியது.
2021ல் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎஃப் ஜவான் ஜெகன்நாத் ராயின் மனைவி தபசி ராயை பாஜக களத்தில் இறக்கியது. துப்குரி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், இன்று வாக்குப்பதிவு தொடங்கியது முதலே பாஜகவின் தபசி ராய் முன்னிலையில் இருந்தார். இரண்டாவது சுற்று முடிவின்போது, திரிணாமுல் வேட்பாளரை விட சுமார் 1000 வாக்குகள் முன்னிலையில் இருந்தார் பாஜக வேட்பாளர் தபசி ராய்.
மூன்றாவது சுற்றில், திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் வேகமெடுக்கத் தொடங்கினார். மூன்றாவது சுற்று முடிவில் டி.எம்.சி வேட்பாளர் சற்று முந்தினார். மூன்றாவது சுற்று முடிவில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே வெறும் 101 வாக்குகள் வித்தியாசம் இருந்தது. 4-வது சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, இருவருக்கும் இடையேயான வித்தியாசம் 354 வாக்குகளாக இருந்தது.
5வது சுற்றுக்கு மேல் ஆட்டம் சூடுபிடித்தது. டி.எம்.சி வேட்பாளர் நிர்மல் சந்திர ராய், பாஜக வேட்பாளரை விட 1000 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார். அடுத்தடுத்த சுற்றுகளில், பாஜக வேட்பாளரை தன்னை நெருங்க விடாமல் செய்த திரிணாமுல் வேட்பாளர் நிர்மல் ராய், இறுதியில் 4000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம், தங்கள் கையில் இருந்த துப்குரி தொகுதியை இழந்துள்ளது பாஜக.
"வடக்கு வங்காளம் முழுவதுமாக எங்களுடன் உள்ளது. பாஜகவின் தொகுதியாக இருந்த துப்குரியில், அது நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். துப்குரி மக்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். எங்கெல்லாம் பாஜக தோற்று, இந்தியா கூட்டணி கட்சிகள் வென்றாலும், அவர்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன்" என திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications