குடியுரிமை மசோதா எதிர்ப்பு போராட்டம்- அஸ்ஸாமில் பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு
குவஹாத்தி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் அஸ்ஸாமில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
குடியுரிமை மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்து பற்றி எரிகின்றன. மத்திய, மாநில அரசுகள் வாக்குறுதிகள் அளித்த போதும் மக்கள் அதனை நிராகரித்துவிட்டனர்.

அஸ்ஸாமின் பூர்வகுடிமக்கள் தங்களது தாய்நிலம் அகதிகளால் ஆக்கிரமிக்கப்படும் அபாயத்தை குடியுரிமை மசோதா உருவாக்கிட்டதாக கூறி கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்தில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மட்டும் 5 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இவர்களில் 2 பேர் போராட்ட களத்தில் உயிரிழந்தனர்.
மேலும் 3 பேர் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் சிகிச்சை பெற்ற நிலையில் மரணமடைந்தனர். மேலும் போராட்டக்காரர்கள் பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்றையும் தீயிட்டு எரித்தனர். இதில் லாரி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.
தற்போது மேற்கு வங்கத்திலும் உக்கிரமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இம்மாநிலத்தில் ரயில்கள், ரயில்நிலையங்கள் குறிவைத்து தீக்கிரையாக்கப்படுகின்றன. மாநில அரசுக்கு சொந்தமான 22 பேருந்துகளும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.
-
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்.. வேலையை காட்டிய டெல்லி போலீஸ்! 6 பேர் அதிரடி கைது! -
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications