தப்பான பென் டிரைவைப் போட்டு “தப்புத் தப்பான படம்” போட்ட கேபிள் ஆபரேட்டர் கைது
திருவனந்தபுரம்: கேரளாவின் பஸ் நிலையத்தில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டியில் தவறுதலாக ஆபாச படத்தினை ஒளிப்பரப்பிய விவகாரத்தில் கேபிள் ஆபரேட்டர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள கல்பேட்டா பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக நூற்றுக்கணக்கான் மக்கள் காத்து இருந்தனர்.
அதில் குழந்தைகளுடன் தாய்மார்கள், கல்லூரி மாணவிகள், பள்ளி மாணவிகள் என பெண்களே அதிகம். அப்பேருந்து நிலையத்தில் இரண்டு டிவி பெட்டிகள் உள்ளன.

முக்கலும், முனகலும்:
அதில் விளம்பரம் உள்ளிட்டவை ஒளிபரப்பாகி வந்தன. இந்த நிலையில் திடீரென அந்த டிவியில் இருந்து முனகல் சத்தம் கேட்டத் தொடங்கியது அதிர்ச்சியுடன் என்னவென்று பயணிகள் பார்த்தால் அதில் ஆபாச படம் ஓட தொடங்கியிருந்தது.
அவஸ்தையில் நெளிந்த பெண்கள்:
உடனடியாக அங்கிருந்த பெண்களில் இருந்து அனைவரும் நெளிந்து கொண்டும் சிரித்து கொண்டும் அங்கிருந்து ஓட தொடங்கினர். உடனடியாக அந்த டிவியை ஆப் செய்யும் முயற்சியில் சில வாலிபர்கள் இறங்கினர்.
கேபிள் கம்பி துண்டிப்பு:
சிலர் டிவியின் மேல் துணியை போட்டு மூடினர். இருந்தாலும் சத்தம் வந்து கொண்டு இருந்தது. ஒரு சில இளைஞர்கள் டிவிக்கு செல்லும் கேபிளை பெரிய கம்பி மூலம் துண்டித்து விட்டனர். அதன் பிறகுதான் பயணிகளுக்கு நிம்மதி ஏற்பட்டது.
தவறான பென் டிரைவ்:
இது குறித்து உடனடியாக போலீசுக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கேபிள் ஆபரேட்டர்தான் தவறுதலாக விளம்பரத்திற்குப் பதில் வில்லங்கமான படம் உள்ள பென் டிரைவரை போட்டது தெரியவந்தது.
கேபிள் ஆபரேட்டருக்கு களி:
இதுதொடர்பாக கேபிள் டிவி ஆபரேட்டர் மன்சூர் என்பவரைக் கைது செய்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மன்சூர் மீது அநாகரீகமான காட்சியை ஒளிபரப்பியது, பெண்களை அநாகரீகமாக சித்தரித்தது, ஐடி சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications