மாமியார் வீட்டிற்கு சென்ற சிஏஜி ஊழியர் கொலை: ஆணவக் கொலை?
லக்னோ: மும்பையில் சிஏஜி அலுவலக ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கரும்புக் காட்டில் புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் சர்மா(29). அவர் பயிற்சி வகுப்புக்கு சென்ற இடத்தில் வேறு சாதியை சேர்ந்த சோனியா(26) என்ற பெண்ணின் மீது காதல் வயப்பட்டுள்ளார்.

பின்னர் இருவரும் வேலை தேடி மும்பை சென்று அங்கேயே திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மனோஜுக்கு சிஏஜி அலுவலகத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை கிடைத்தது. சோனியா மாநில அரசு தேர்வில் தேர்ச்சி பெற்று உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் புக் கீப்பர் பணியை பெற்றார்.
முசாபர்நகர் குத்பா கிராமத்தில் இருக்கும் தனது மாமனார், மாமியாரை பார்க்க மனோஜ் கடந்த செவ்வாய்க்கிழமை அங்கு சென்றார். மறுநாள் அவர் தனது பெற்றோரை பார்க்க கிளம்பிய போது சோனியாவின் சகோதரர்களும் அவருடன் சென்றுள்ளனர்.
மனோஜ் தனது பெற்றோரின் வீட்டை அடையவில்லை. சோனியாவின் சகோதரர்களையும் காணவில்லை. இதையடுத்து சோனியா தனது சகோதரர்கள் மீது போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தேடியபோது தான் மனோஜ் கொலை செய்யப்பட்டு கரும்புக் காட்டில் உடல் புதைக்கப்பட்டது தெரிய வந்தது.
சோனியாவின் 4 சகோதரர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். மனோஜுக்கு டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் டெல்லிக்கு கிளம்பும் முன்பு மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவில் கர்ப்பணி பெண் கண் முன்பே அவரது கணவர் கொலை செய்யப்பட்டார். அது போன்றே மனோஜ் கொலையும் ஆணவக் கொலையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications