முன்பின் தெரியாத பெண்களை "டார்லிங்" என கூப்பிட்டால் சிறை தண்டனை.. கொல்கத்தா ஹைகோர்ட் அதிரடி!
கொல்கத்தா: முன்பின் தெரியாத பெண்களை டார்லிங் என கூப்பிடுவது பாலியல் துன்புறுத்தலுக்கு ஈடானது என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்தமானில் கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றிற்கு பாதுகாப்பு பணிக்காக மயபந்தர் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் போலீசார் சென்று இருந்தனர். பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போது, குடிபோதையில் அங்கு ஜானக் ராம் என்பவர் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கிருந்த பெண் போலீஸ் ஒருவரை டார்லிங் என ஜானக் ராம் அழைத்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் அளித்த புகாரின் பேரில் ஜானக் ராம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு அங்குள்ள கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு தீர்ப்பளித்த நீதிமன்றம், ஜானக் ராமுக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்தது.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஈடானது: இந்த சிறை தண்டனையை எதித்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ஜானக் ராம் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி ஜெய செங்குப்தா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். அதாவது, முன்பின் அறிமுகம் இல்லாத பெண்ணை டார்லிங் என அழைப்பது இ.பி.கோவின் கீழ் பாலியல் துன்புறுத்தலுக்கு ஈடானது.
பாலியல் நோக்கத்துடன் இவ்வாறு அழைப்பது பிரிவு 354A (1)(iv) - ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்படுகிறது" என்று உத்தரவு பிறப்பித்தது. எனினும், போர்ட் பிளேர் நீதிமன்றம் விதித்த 3 மாதங்கள் சிறை தண்டனையை ஒரு மாதமாக குறைத்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் கருத்து: கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கொலகத்தா உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் சுப்ரோடோ முகர்ஜி, டார்லிங் என்பதற்கு மிகவும் அன்புக்குரிய முறையில் அழைப்பது என்றே அகராதி சொல்கிறது. எனவே இது எப்படி இழிவான சொல்லாக அமையும். அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கலாம்..
அவர் வேண்டும் என்றே சொன்னது போல தெரியவில்லை. கலோக்கியலாக கூறியிருக்கிறார்" என்றார். எனினும், கொல்கத்தா உயர் நீதிமன்ற ரவிந்திர நாத் சமந்தா கூறுகையில், டார்லிங் என்ற வார்த்தையை மோசமான எண்ணத்தில் கூறியுள்ளார். ஆகவே அவருக்கு தண்டனை கிடைத்துள்ளது. ஒரு வார்த்தைக்கு பாலியல் சாயம் பூசப்படக்கூடிய வாய்ப்பு இருந்தால் அதை ஒருவர் பயன்படுத்தக் கூடாது" என்றார்.












Click it and Unblock the Notifications