மத்திய அமைச்சர் ஆடை மாற்றிய அறையில் கேமரா.. கைதான ஃபேப்இந்தியா ஊழியர்களுக்கு ஜாமீன்!
பானாஜி: ஜவுளிக் கடையின் துணி மாற்றும் அறையில் கேமராவை வைத்து படம் பிடித்த குற்றத்திற்காக, கோவாவிலுள்ள ஃபேப்இந்தியா நிறுவனத்தில் பணியாற்றிய 4 ஊழியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மாலையிலேயே அவர்களுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
இதனிடையே, நாடு முழுவதிலும் செயல்படும் அந்த துணிக்கடைகளை ம்ூட வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கைவிடுத்துள்ளது.

மத்திய மனித வளத்துறை அமைச்சரான ஸ்மிருதி இரானி, சமீபத்தில் கோவாவிலுள்ள ஃபேப்இந்தியா நிறுவன துணிக்கடைக்கு ஆடை வாங்க சென்றார். அவர் ஆடைகளை வாங்கி செனஅறு டிரையல் அறையில் உடுத்தி பார்த்தபோது, அந்த அறையில், ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து இரானி போலீசில் புகார் அளித்த நிலையில், இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதனிடையே, கடை ஊழியர்கள் பரேஷ் பகத், ராஜு பயான்சே, பிரசாந்த் நாயக் மற்றும் கரிம் லகானி ஆகிய நால்வரை கோவா போலீசார் கைது செய்துள்ளனர்.
ஃபேப்இந்தியா நிறுவன தலைமையிலுள்ள அதிகாரிகளான அதன் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி வில்லியம் பிசேலிடம் விசாரணை நடத்த கோவா போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனிடையே, ஃபேப்இந்தியா தலைமை அதிகாரிகள் குழு, கோவா விரைந்துள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து ஃபேப்இந்தியா கடைகளையும் மூட வேண்டும் என்று கோவா மாநில காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது. இதனிடையே தலா 50 ஆயிரம் பிணைய நிபந்தனையுடன், 4 ஊழியர்களுக்கும் இன்று மாலை கோவா நீதிமன்றம் ஜாமீன் அளித்தது.












Click it and Unblock the Notifications