ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாததால் ராமர் கோவில் கட்ட சட்டம் கொண்டு வர முடியாது: ராஜ்நாத் சிங்
டெல்லி: ராஜ்யசபாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட புதிய சட்டம் கொண்டு வருவது சாத்தியம் அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட புதிய சட்டத்தை கொண்டு வருவோம் என்று பாஜக வாக்குறுதி அளித்தது. பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியும் ராமர் கோவில் தொடர்பாக எந்த சட்டமும் கொண்டு வரப்படவில்லை.

இந்நிலையில் இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில்,
ராஜ்யசபாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. அதனால் ராமர் கோவில் கட்ட நாடாளுமன்றத்தில் சிறப்பு சட்டம் கொண்டு வருவது சாத்தியம் அல்ல என்றார்.
ராஜ்யசபாவில் மொத்தம் 243 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 45 பேர் ஆளும் பாஜகவைச் சேர்ந்தவர்கள். எதிர்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் 132 பேர் உள்ளனர். அதனால் தான் ராஜ்யசபாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்த பிறகு ராமர் கோவில் கட்டுவது தொடர்பான சட்டம் கொண்டு வரப்படுமா என்று ராஜ்நாத்சிங் தெரிவிக்கவில்லை.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications