போதையில் பிரசவம் பார்த்த ஆண் நர்ஸ்.. சிசுவின் காலை இழுத்ததால் தலை துண்டான கொடூரம்!
ஆண் நர்ஸ் பிரசவம் பார்த்ததால் குழந்தையின் தலை துண்டாகிவிட்டது.
Recommended Video

ஜெய்ப்பூர்: இப்படிக்கூட எங்காவது நடக்குமா? பெண்ணுக்கு ஆண் நர்ஸ் ஒருவர் போதையில் பிரசவம் பார்க்க போய், அந்த குழந்தை ரொம்ப கொடூரமாக இறந்தே போய்விட்டது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி திலோக்பதி - தீக்ஷா கன்வர். இவர் நிறைமாத கர்ப்பிணி என்பதால், போன வாரம் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இதனால் திலோக்பதி ராம்காரில் உள்ள அரசு சுகாதார மையத்தில் மனைவியை கொண்டு போய் சேர்த்தார். ஆனால் பணியில் டாக்டர் இல்லை. வெளியே சென்றிருந்தார். அதே சமயத்தில் பெண் நர்சுகளும் அங்கு இல்லை.

செம போதை
ஆண் நர்ஸ் அமிர்த்லால்தான் அங்கு இருந்தார். கூடவே ஒரு உதவியாளரும் இருந்தார். இரண்டு பேருமே செம போதையில் இருந்தனர். வலியால் பெண் துடிப்பதை பார்த்ததும், உடனே தானே பிரசவம் பார்க்க ஆரம்பித்தார். பொதுவாக பிரசவத்தின்போது குழந்தையின் தலைதான் முதலில் வரும். ஆனால் இந்த பெண்ணுக்கு குழந்தையின் கால் வந்தது.

கர்ப்பப்பையில் தலை
உடனே போதையில் இருந்த ஆண் நர்ஸ், மற்றும் உதவியாளர் இருவரும், அந்த காலை பிடித்து வேகமாக வெளியே இழுத்தனர். இதனால் குழந்தையின் உடல் துண்டாகிவிட்டது. அதாவது குழந்தையின் உடல் வந்துவிட்டது, தலை மட்டும் கர்ப்ப பையிலேயே தங்கிவிட்டது. வெளியே வந்து விழுந்த உடல் தலையில்லாமல் துடித்துடித்து இறந்தது.

சிக்கலா இருக்கு
பிரசவித்த பெண்ணும் மயக்கமாகிவிட, அந்த குழந்தையின் உடலை இருவரும் எடுத்து கொண்டு போய் பிணவறையில் மறைத்து வைத்துவிட்டு வந்துவிட்டார்கள். பிறகு மனைவிக்கு என்னாகுமோ என்று பயந்தபடி காத்துகிடந்த கணவனிடம், "பிரசவம் கொஞ்சம் சிக்கலா இருக்கும் போல இருக்கு. அதனால, ஜோத்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய்டுங்க" என்று சொல்லி இருக்கிறார்கள்.

தலையை வெளியே எடுத்தனர்
உடனே கணவரும் மயங்கி கிடந்த மனைவியை ஜோத்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், குழந்தைக்கு தலை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, உடனடியாக பெண்ணுக்கு ஆபரேஷன் செய்தார்கள். தலையை மட்டும் வெளியே எடுத்தார்கள். இதுகுறித்து விசாரித்தபோதுதான், ராம்கார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

குழந்தை உடல் மீட்பு
பெண்ணின் கணவர் போலீசில் புகார் அளிக்கவும், விரைந்து வந்த அவர்கள், ராம்கார் ஆஸ்பத்திரியின் பிணவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குழந்தையின் உடலை மீட்டார்கள். இது சம்பந்தமான பிரசவம் பார்த்த 2 பேர் மீதும் அஜாக்கிரதையாக சிகிச்சை அளித்து மரணத்தை ஏற்படுத்துதல், பாதுகாப்பற்ற முறையில் ஆபத்தான சிகிச்சை அளித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கவலைக்கிடம்
ஆனால் இரண்டு பேருமே இப்போது எஸ்கேப் ஆகி உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.தலை வயிற்றுக்குள்ளேயே தங்கியிருந்ததால், பெண்ணின் நிலைமை ரொம்பவும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications