கெஜ்ரிவால் மகள் பற்றி ஃபேஸ்புக்கில் தரக்குறைவாக கருத்து தெரிவித்தவர் மீது வழக்கு
காசியாபாத்: ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் குறித்து தவறாக ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்தவர் மீது உத்தர பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட நிர்வாகி சேத்தன் தியாகி போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் மற்றும் அக்கட்சி நிர்வாகி அல்கா லம்பா ஆகியோர் பற்றி பி.கே. ஜகோதியா என்பவர் ஃபேஸ்புக்கில் தரக்குறைவான கருத்துகளை தெரிவித்துள்ளார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி தியாகி கூறியது உண்மை என்பதை கண்டறிந்தனர். அதன் பிறகு ஜகோதியா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கின் விசாரணை குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
20 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் இருந்த அல்கா ஆம் ஆத்மி கட்சிக்கு தாவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications