பத்திரிகையாளரை சுட்டுக் கொன்ற வழக்கில் குண்டர் கும்பல் தலைவன் ராம் ரஹீமுக்கு அடுத்த காப்பும் ரெடி!
பலாத்கார வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராம் ரஹீம் சிங் மீதான பத்திரிகையாளர் கொலை வழக்கு விசாரணை செப்டம்பர் 16-ந் தேதி நடைபெற உள்ளது.
சண்டிகர்: பாலியல் பலாத்கார வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாமியார் ராம் ரஹீம் சிங் மீதான பத்திரிகையாளரை கொலை செய்த வழக்கு விசாரணை செப்டம்பர் 16-ந் தேதி நடைபெற உள்ளது.
பக்தைகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேரா சச்சா சவுதா எனும் ஆன்மீக அமைப்பின் நிறுவனர் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ராம் ரஹீம் சிங் ஆதரவு குண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

இந்த வன்முறையில் 38 பேர் பலியாகினர். 250-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில் இன்று ராம் ரஹீம்சிங்குக்கு 10 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்தும் ராம் ரஹீம் சிங்கின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே ராம் ரஹீம் சிங்கின் பாலியல் பலாத்கார விவகாரத்தை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் ராம் சந்திர சத்ரபதியை சுட்டுக் கொன்ற கொலை வழக்கு விசாரணை செப்டம்பர் 16-ந் தேதி நடைபெற உள்ளது. ராம் சந்திர சத்ரபதியை ராம் ரஹீம் ஆதரவு கும்பல்தான் சுட்டுக் கொன்றது என்பது வழக்கு.
இந்த வழக்கிலும் ராம் ரஹீம் சிங்குக்கு தண்டனை கிடைக்கும் என ராம் சந்திர சத்ரபதி குடும்பத்தினர் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். ராம் ரஹீம் சிங்குக்கு தண்டனை விதித்த பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றமே இந்த தீர்ப்பையும் வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications