சரிதா நாயர் பாலியல் புகார்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது வழக்கு
திருவனந்தபுரம்: சோலார் சூரிய ஒளி மின் தகடு ஊழல் வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வந்துள்ள சரிதா நாயர், கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ. அப்துல்லாகுட்டி மீது பாலியல் புகார் கூறியுள்ளார். இதையடுத்து எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கேரளாவில், சோலார் சூரிய ஒளி மின் தகடு விநியோகம் தொடர்பாக நடைபெற்ற ஊழலில் சிக்கி பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவே வந்திருப்பவர் சரிதா எஸ்.நாயர்.

இவர் கண்ணூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அப்துல்லா குட்டி மீது சில புகார்களை கூறி இருந்தார். இந்நிலையில், திடீரென்று திருவனந்தபுரம் கண்டோன்மெண்ட் பெண் போலீஸ் நிலையத்திற்கு சென்ற சரிதா நாயர், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சோலார் வியாபாரம் தொடர்பாக பேசலாம் எனக்கூறி தன்னை அப்துல்லா குட்டி எம்.எல்.ஏ. அழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார்.
இதையடுத்து, அவரது புகாரின் அடிப்படையில் அப்துல்லா குட்டி மீது பாலியல் பலாத்காரம் மற்றும் பெண்களுக்கு களங்கம் ஏற்படுத்தியது, மிரட்டல் ஆகிய குற்றங்கள் தொடர்பான வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த புகாரை திருவனந்தபுரம் துணை போலீஸ் கமிஷனர் அஜிதா பேகம் விசாரணை நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications