ஆந்திர முதல்வர் பற்றி அவதூறு செய்தி.. தெலுங்கானா முதல்வர் குடும்ப சேனலுக்கு நோட்டீஸ்!
ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு குறித்து அவதூறான தகவல்கள் வெளியிட்டது தொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்வின் குடும்பத்திற்கு சொந்தமான டி. நியூஸ் என்ற செய்தி சேனலுக்கு ஆந்திர போலீஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தெலுங்கானா மாநில மேலவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக ஓட்டு போடுமாறு தெலுங்கானா ராஷ்டிர சமித்தி எம்.எல்.ஏ ஸ்டீபன்சனுக்கு பணம் கொடுத்து நெருக்கடி தரப்பட்டதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரடியாக, ஸ்டீபன்சனுக்கு போன்போட்டு பேசியதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆடியோவை பதிவு செய்த தெலுங்கானா ராஷ்டிர சமித்தி தரப்பு, அதை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் குடும்ப தொலைக்காட்சியான டி. நியூஸ் சேனலில் ஒலிபரப்பி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த சந்திரபாபு நாயுடு, எனது தொலைபேசி உரையாடல்களை தெலுங்கானா அரசாங்கம் ஒட்டு கேட்கிறது என்று கூறி, கதறி துடித்தார்.
இந்நிலையில், சேனல் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. "எந்த ஆதாரத்தில் இந்த தொலைபேசி உரையாடல் ஒலிரப்பு செய்யப்பட்டது என்பது குறித்து 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் இல்லையேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்து, சேனல் நிர்வாகத்துக்கு ஆந்திர காவல்துறை நேற்றிரவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications