தமிழகத்திற்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க முடியாது.. உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா அறிக்கை
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு இந்த மாதம் 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட இயலாது என உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அறிக்கை அளித்துள்ளது.
Recommended Video

டெல்லி: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு இந்த மாதம் 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட இயலாது என உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அறிக்கை அளித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது.இதற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்த பின்பும் கூட இன்னும் வாரியம் அமைக்கவில்லை. இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நாளை உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது.

கடந்த விசாரணையில் தமிழகத்திற்கு மே மாதம் திறக்க வேண்டிய தண்ணீர் அளவு குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகாவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.மேலும் இந்த உத்தரவை மீறி செயல்பட்டால் கர்நாடக அரசு மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிட இயலாது என உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அறிக்கை அளித்துள்ளது. மழை பற்றாக்குறையால் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியாது என்றும் விளக்கம் அளித்துள்ளது. எங்களுக்கே தண்ணீர் பற்றாக்குறை உள்ளது தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளது.
4 டிஎம்சி தண்ணீரை உடனே தமிழகத்திற்கு வழங்க முடியாது. மேலும் இந்த ஆண்டு ஏப்ரல் இறுதி வரை தமிழகத்திற்கு 116.7 டிஎம்சி நீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டதைவிட கூடுதலாக 16.66 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட்டுள்ளோம். அதனால் கூடுதலாக தண்ணீர் தர முடியாது என்று உச்சநீதிமன்ற உத்தரவை வழக்கம்போல காற்றில் பறக்கவிட்டுள்ளது சித்தராமையா அரசு.
நாளை காவிரி வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. ஏற்கனவே காவிரி வாரிய பிரச்சனை உச்சத்தில் உள்ளது. இந்த நிலையில் கர்நாடக இந்த மாதிரியான பதிலை அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications