For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி மேலாண்மை வாரிய வழக்கு: மேலும் 2 வாரம் அவகாசம் கோரிய மத்திய அரசு மனு திடீர் வாபஸ்!!

காவிரி விவகாரத்தில் 2 வாரம் கேட்ட கால அவகாசத்தை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: காவிரி விவகாரத்தில் 2 வாரம் கேட்ட கால அவகாசத்தை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை செயல்படுத்த செயல் திட்டத்தை 6 வார காலத்திற்குள் மத்திய அரசு ஏற்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

Cauvery: Centre seeks 2 weeks time to prepare framework to implement verdict

மேலும் தீர்ப்பை நடைமுறைப்படுத்த 3 மாதம் அவகாசமும் கேட்டது.அதேசமயம் தீர்ப்பை அமல்படுத்த தவறிய மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

விசாரித்த சுப்ரீம் கோர்ட், மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த காலக்கெடு முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், மத்திய அரசு சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை உருவாக்க அளிக்கப்பட்ட கால அவகாசம் போதவில்லை என்றும், மேலும் 2 வாரம் அவகாசம் தேவை என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் காவிரி விவகாரத்தில் 2 வாரம் கேட்ட கால அவகாசத்தை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. தலைமை வக்கீல் அறிவுறுத்தல் பேரில் மனுவை மத்திய அரசு வாபஸ் பெற்றதாக தகவல் தெரிவித்துள்ளது.

English summary
Central govt has withdrawn its petition of two weeks time extension in the Cauvery issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X