காவிரிப் பிரச்சினையை தீர்க்கனுமா.. இதைக் கேளுங்க.. இஸ்ரேல் தரும் ஐடியா!
பெங்களூரு: காவிரிப் பிரச்சினைக்கு இஸ்ரேல் ஒரு தீர்வை முன்வைத்துள்ளது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் ஆகிய இரு மாநில விவசாயிகளும் இதைக் கடைப்பிடித்தால் நிச்சயம் நதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை பெருமளவு குறையும் என்பது இஸ்ரேலின் கருத்தாகும்.
இரு மாநிலங்களும் அதிக அளவில் காவிரி நீரை நம்பியிருப்பதால்தான் இவ்வளவு பிரச்சினை என்று கூறும் இஸ்ரேல், நீர்த் தேவையைக் குறைக்கும் வகையிலான பாசனமுறைக்கு மாற வேண்டும் என்றும் அறிவுரை கூறுகிறது. அதைச் செய்தால் நிச்சயம் இந்த அளவுக்குப் பிரச்சினை வராது என்பதும் இஸ்ரேலின் யோசனையாகும்.
பெங்களூரில் சமீபத்தில் இஸ்ரேல் தூதரகம் சார்பில் அந்த நாட்டின் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த கண்காட்சி நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய இஸ்ரேல் துணைத் தூதர் ஜிவ் ஷால்வி என்பவர் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

சொட்டு நீர்ப்பாசனம்
இதுகுறித்து அவர் கூறுகையில் சொட்டு நீர்ப் பாசனத்தின் மகிமையை இரு மாநில விவசாயிகளும் மிகத் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும்.அது நமது நீர்த் தேவையில் 50 சதவீதத்தைக் குறைத்து விடும். இது இஸ்ரேலில் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது.

சரியான உரமிடுதல்
அதேபோல சரியான உரமிடுதலும் மிக மிக முக்கியமானது. என்ன உரம் தேவை, எவ்வளவு தேவை என்பதை சரியாக ஆய்வு செய்து உரமிட வேண்டும். அப்போதுதான் மண்ணைக் காக்க முடியும்.

இங்கே கரும்பு..அங்கே நெல்
கர்நாடக காவிரிப் பாசனப் பகுதியில் அதிக அளவில் கரும்பு பயிரிடுகிறார்கள். தமிழகத்தில் நெல் அதிகம் விளைகிறது. இரண்டுக்குமே தண்ணீர் அதிகம் தேவை. கர்நாடகத்திற்குரிய காவிரி நீரில் முக்கால்வாசியை நீர்ப்பாசனத்திற்குத்தான் பயன்படுத்துகிறார்கள். இதில் மாற்றம் வர வேண்டும்.

சொட்டு நீர்ப் பாசனத்தால் குறைக்கலாம்
இந்த நேரத்தில்தான் நமக்கு சொட்டு நீர்ப்பாசனம் பெருமளவில் உதவும். தண்ணீர்த் தேவையை இது வெகுவாக குறைக்கும். இதை விவசாயிகள் செய்து பார்க்கலாம். மேலும் கழிவு நீரை சுத்திகரித்து விவசாயத்திற்குப் பயன்படுத்தும் திட்டத்தையும் ஆராய்ந்து பார்க்கலாம். கடல் நீரை சுத்திகரித்து பயன்படுத்த முயற்சிக்கலாம் என்றார் அவர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்!












Click it and Unblock the Notifications