காவிரி:பெங்களூரில் இன்று பள்ளிகளை திறப்பதா? இல்லையா? என்பதை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்து கொள்ளலாம்
பெங்களூர்: காவிரி விவகார வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதனால் வன்முறை சம்பவங்கள் வெடிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. எனவே பெங்களூரில் இன்று பள்ளிகளை திறப்பது குறித்து அந்தந்த பள்ளி நிர்வாகம் முடிவு செய்து கொள்ளலாம் என அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி கண்காணிப்பு குழுக் கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. இதில் நாளை மறுநாள் (செப்டம்பர் 21) முதல் 10 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்திற்கு திறக்க வேண்டும் என காவிரி கண்காணிப்பு குழு கர்நாடக அரசிற்கு உத்தரவிட்டது.

ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தமிழக அரசிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி நாளை வரை தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. இந்நிலையில் காவிரி கண்காணிப்பு குழுவும் தமிழகத்திற்கு நீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் பெங்களூரு, மைசூரு, மாண்டிய உள்ளிட்ட பகுதிகளில் கன்னட அமைப்பினர், விவசாய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாக கருதப்படுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், பெங்களூரில் இன்று பள்ளிகளை திறப்பதா? இல்லையா? என்பதை அந்தந்த பள்ளி நிர்வாகம் முடிவு செய்து கொள்ளலாம் என அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரில் வெடித்த கலவரத்தின் போது பள்ளிகளுக்கு காவல் துறையினர் பாதுகாப்பு வழங்வில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே வதந்திகளை நம்ப வேண்டாம். பெங்களூருவில் நாளை முழு அடைப்பு ஏதும் இல்லை என பெங்களூரு நகர போலீஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications