விளக்கம் கேட்க இவ்வளவு நாட்கள் தேவையா? காவிரி வழக்கில் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
Recommended Video

டெல்லி: ஸ்கீம் என்றால் என்ன என்று, மத்திய அரசு தாமதமாக உச்சநீதிமன்றத்தை அணுகி விளக்கம் கேட்டதற்கு தலைமை நீதிபதி தீபஸ் மிஸ்ரா கண்டனம் தெரிவித்தார்.
காவிரி நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் 6 வாரங்களுக்குள் காவிரி பங்கீடு தொடர்பாக ஸ்கீம் உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்த நிலையில், காலக்கெடு முடிந்த பிறகு, ஸ்கீம் என்றால் என்ன என உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு அணுகி விளக்கம் கேட்டது.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது,
மார்ச் 31 ஆம் தேதிக்கு முன்னதாக உச்சநீதிமன்றத்தை அணுகி காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்காதது ஏன்?
உங்களின் கடமைகளில் இருந்து நீங்கள் தப்பிக்க முடியாது, என்று தீபக் மிஸ்ரா கேள்வி எழுப்பினார்.
மேலும், ஸ்கீம் பற்றி தற்போது எதுவும் கூற முடியாது, மத்திய அரசு தாக்கல் செய்யும் வரைவு அறிக்கைக்குப் பின்பே முடிவு செய்யப்படும்.
ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் என நாங்கள் தீர்ப்பில் குறிப்பிடவில்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
நதிநீர் தாவா சட்டத்தில், ஸ்கீம் என்றால் என்ன என்பது குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மத்திய அரசு காலதாமதம் செய்வதை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!











Click it and Unblock the Notifications