"கனத்த இதயத்துடன்" கர்நாடகா திறந்துவிட்ட காவிரி நீர் இன்று தமிழகத்திற்கு வந்தது #cauvery
சென்னை: கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் இன்று தமிழகத்தை வந்தடைந்தது.
தமிழகத்திற்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் (12.96 டி.எம்.சி.) திறந்து விடுமாறு உச்ச நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் பேருந்துகள் ஓசூரோடு நிறுத்தி வைக்கப்படுகின்றன.

இதற்கிடையே உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று நேற்று முன்தினம் இரவு 12.05 மணிக்கு கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரும் திறந்துவிடப்பட்டது.
அதாவது கூடுதலாக 1000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் திறந்துவிடப்பட்ட நீர் இன்று காலை பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. இன்று இரவுக்குள் நீர் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் காவிரி நீர் திறந்துவிடப்பட்டதை கண்டித்து நாளை கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டத்தை கன்னட அமைப்புகள் நடத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications