தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கக்கூடாது.. கர்நாடகா விவசாயிகள் கொந்தளிப்பு..மண்டியாவில் இன்று பந்த்
மண்டியா: காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு 5,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு அம்மாநிலத்தில் உக்கிரமான எதிர்ப்பு தொடருகிறது. மண்டியா மாவட்டத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்த கன்னட விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
காவிரியில் 24,000 கன அடி நீரை திறக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டின் கோரிக்கை. இதனை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. முன்னதாக காவிரி மேலாண்மை ஆணையம் விநாடிக்கு 5,000 கன அடி நீரை மட்டும் தமிழ்நாட்டுக்கு திறந்துவிட உத்தரவிட்டது. இதனையும் ஏற்காமல் விநாடிக்கு 2000 கனஅடி தண்ணீரை மட்டுமே திறந்துவிட்டிருந்தது கர்நாடகா. வரலாறு காணாத வறட்சி நிலவுவதால் தண்ணீர் தர முடியாது என்பது கர்நாடகாவின் வாதம்.

தமிழ்நாடு அரசின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வினாடிக்கு 5,000 கன அடி நீரை காவிரியில் தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வியாழக்கிழமையன்று உத்தரவிட்டது. காவிரி மேலாண்மையத்தின் உத்தரவுக்கு தடை கோரிய கர்நாடகாவின் மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடவே கூடாது என ஏற்கனவே கன்னட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு கர்நாடகாவில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடகாவின் மண்டியா, சாம்ராஜ் நகர், மைசூர், பெங்களூர் நகரங்களில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்தன.
மண்டியா மாவட்டம் பாண்டவபுராவில் மேலக்கோட்டை சுயேட்சை எம்.எல்.ஏ. தர்ஷண் புட்டண்ணா தலைமையில் கன்னட விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். கர்நாடகா சேனா படையினர் மைசூரில் துடைப்பத்தால் சாலையில் அடித்தபடி போராட்டத்தை மேற்கொண்டனர். மைசூர் காடா நீர்ப்பாசனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்பட்டது.
பெங்களூரில் கன்னட ரக்ஷன வேதிகே இயக்கத்தின் நாராயண கவுடா தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. பெங்களூர் விதான் சதா முற்றுகைப் போராட்டத்தையும் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் நடத்தினர்.

இதனிடையே காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டியா மாவட்டம் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கன்னட விவசாயிகள் சங்கம் இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனையடுத்து ஶ்ரீரங்கப்பட்டணா, கண்ணம்பாடி கிருஷ்ணராஜ சாகர் மற்றும் மைசூர் கபினி அணை உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்படும். தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் மாநில எல்லைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படுவதால் இரு மாநில எல்லைகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications